பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் கவிஞருக்கு சிலை அமைக்க செயற்குழு தீர்மானம்

Added : செப் 06, 2012
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு, முழு உருவ வெண்கலச் சிலை வைக்க, நாமக்கல்லில் நடந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வாரிசுகள் சங்க செயற்குழு கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயலாளர் அவினாசிலிங்கம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுகளுக்கு பென்சன் உயர்வு, மருத்துவப்படி உயர்வு வழங்கிய, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. அதுபோல், விலைவாசிப்படியை, ஓய்வூதியம் பெரும் அனைவருக்கும் வழங்க வேண்டும். தமிழகத்தில், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். நாமக்கல்லில், கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு, முழு உருவ வெண்கலச் சிலை வைக்க வேண்டும்.
அதுபோல், நகராட்சி செலம்ப கவுண்டர் பூங்காவினுள், செலம்பகவுண்டருக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க பொருளாளர் தங்கவேல், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X