பொது செய்தி

தமிழ்நாடு

ஆளில்லா விமானம் கொடுத்த "துப்பு': "கன்டெய்னரை' தேடி மலை ஏறிய அதிகாரிகள்

Updated : செப் 12, 2012 | Added : செப் 10, 2012 | கருத்துகள் (15)
Share
Advertisement
மேலூர் : மதுரை மேலூர் பகுதியில், மலை மீது "கன்டெய்னர்'பதுக்கப்பட்டிருப்பதாக, ஆள் இல்லா விமானம் தகவல்அளித்தது. நேற்று, ஒவ்வொரு மலையாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.சென்னை அண்ணாபல்கலை, விண்வெளி ஆராய்ச்சி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், "ஆள் இல்லா குட்டி விமானத்தை' குவாரிகளின் மேல் பறக்கவிட்டு சோதனையிட்டனர்.இடையபட்டி, கீழவளவு பகுதியில் இரண்டு
ஆளில்லா விமானம் கொடுத்த "துப்பு': "கன்டெய்னரை' தேடி மலை ஏறிய அதிகாரிகள்

மேலூர் : மதுரை மேலூர் பகுதியில், மலை மீது "கன்டெய்னர்'பதுக்கப்பட்டிருப்பதாக, ஆள் இல்லா விமானம் தகவல்அளித்தது. நேற்று, ஒவ்வொரு மலையாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை அண்ணாபல்கலை, விண்வெளி ஆராய்ச்சி பேராசிரியர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர், "ஆள் இல்லா குட்டி விமானத்தை' குவாரிகளின் மேல் பறக்கவிட்டு சோதனையிட்டனர்.இடையபட்டி, கீழவளவு பகுதியில் இரண்டு நாட்கள், சோதனை நடந்தது. கீழவளவு பகுதியில், சிறு மலை உச்சியில் செவ்வகம் போன்றஅமைப்பில் வெட்டப்பட்டு, உள்ளே "கன்டெய்னர்' போன்ற பொருள் இருப்பது, விமான வீடியோ பதிவில் தெரிந்தது. நேற்று காலை, அந்த இடத்தை தேடும் பணியில், துணை கலெக்டர்கள் இளங்கோவன், ரவீந்திரன்,கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெய்சிங் ஞானதுரைஈடுபட்டனர்.


மலை மலையாய்...:

மாலை நேரத்தில், சற்று தெளிவில்லாமல், வீடியோ எடுக்கப்பட்டுஇருந்தது. இதனால், எந்த மலை என, அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.முதலில், கீழையூர் சிசிகண்மாய் அருகில் உள்ள சிறு குன்றுகளில் சோதனையிட்டனர். பின், பஞ்ச பாண்டவர் மலையில் சோதனையிடப்பட்டது. இதன் பின், நாவினிப்பட்டி மூக்காண்டி மலை மீது ஏறிய அதிகாரிகள், அங்கும்"கன்டெய்னர்' இல்லாதது கண்டு ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், மலையின் பின்புறம், தரையில் ஒரு "கன்டெய்னர்' இருப்பதை கண்டுபிடித்தனர்.


ஏமாற்றியது

:வடக்கு நாவினிப்பட்டியில், "கன்டெய்னர்' இருந்த அந்த குவாரி, சென்னை "கேலக்ஸி' என்னும் நிறுவனத்திற்குசொந்தமானது. அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், அந்த "கன்டெய்னரை' திறக்கஅதிகாரிகள் கூறினர். உள்ளே, வாகன உதிரி பாகங்கள்,"ஆயில் டிரம்' கள் இருந்தன. ஏற்கனவே கீழவளவு,இடையபட்டியில் சிக்கிய "கன்டெய்னர்' களிலும், எந்தபொருளும் சிக்கவில்லை. ஒரு பெட்டியில் மட்டும், "காமராஜ் பல்கலை' தேர்வு தாள்கள்சிக்கின."ஆள் இல்லா விமான வீடியோ பதிவில் உள்ள "கன்டெய்னரை', இன்று கண்டுபிடித்தே தீருவோம்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


அடுத்து வருது:

இரண்டுநாட்கள், மேலூர் பகுதியில் பறந்து பறந்து சோதனைநடத்திய ஆளில்லா விமானம், சென்னை சென்று விட்டது. மண்ணுக்குள் பதுக்கப்பட்ட, தண்ணீருக்கு அடியில் உள்ள பொருட்களை காணும்வகையில், நவீன தொழில்நுட்பம் உள்ள விமானம் வர உள்ளது."ரேடார்', "சென்சார்' பொருத்தி, "அல்ட்ரா' வசதியுடன் உள்ள விமானத்தின் மூலம், குவாரிகளுக்குள் பதுக்கப்பட்ட பொருட்கள் குறித்து ஆராய உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
appu - madurai,இந்தியா
11-செப்-201214:24:30 IST Report Abuse
appu மதுரைல சில வி ஐ பி களுக்கு வயிறு கலக்குதா சாமியோவ்?? அஞ்ச மாட்டோம்லே....
Rate this:
Cancel
nisthar - melur  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201213:53:13 IST Report Abuse
nisthar குவாரின்னு மேலூருக்கு வந்த பிறகு வீட்டு வாடகையை எக்குதப்பாக ஏற்றி விட்டார்கள். இனிமேலாவது விமோசனம் கிடைத்தால் சரி.
Rate this:
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
11-செப்-201212:36:22 IST Report Abuse
Hasan Abdullah ஆளில்லா விமானத்தை இந்தளவு புகழ்ந்து எழுதி இருந்தீர்களே, அது புகைப்படம் எடுக்கும் போது, Langitude & Lattitude போன்றவற்றையும் GPS வசதியை கொண்டு இணைத்து இருந்தால் அந்த கண்டைனர் எந்த இடத்தில் உள்ளது என தேட வேண்டாமே, எனக்கு எதோ இந்த விமானம் ஒரு அவாளால் ஏற்படுத்தபட்டிருக்கும், அதனால் தான் மலர் இதழ் இதற்க்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது என சந்தேகம் இருக்கிறது. பேராசிரியர் செந்தில் குமார் அவாளா இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது வழிகாட்டியில் செய்த மாணவர்கள் அவாளாக இருக்க வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X