புதுடில்லி: டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து முடிவு செய்ய நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று மாலை நடக்க முடிவு செய்யப்பட்டிருந்து. தற்போது கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது..
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு ஏற்ப , எரிபொருட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் பெட்ரோல் மீதான விலை நிர்ணயத்தினை மத்திய அரசு கடந்த 2010-ம் ஆண்டிலேயே தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தது. எஞ்சியிருக்கும் டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் டீசல் , சமையல் கேஸ், கெரசின் விலைகள் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனவே டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 அல்லது ரூ. 5 வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக அரசில் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் இன்று மாலை ,நடக்க இருந்தது. இதில் காங். தலைவர் சோனியா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்க இருந்தனர்.
விலை உயர்வு தவிர்க்க முடியாதது :
இந்நிலையில் இன்று மாலை நடக்க இருந்து அமைச்சரவைக் கூட்டம் திடீரென தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் எப்போது நடக்க உள்ளது என்பது குறித்து தேதி அறிவிக்கப்பட வில்லை. இதனால் டீசல், கியாஸ் விலை உயர்வு முடிவு தள்ளி வைக்கப்பட்டு்ள்ளது. முன்னதாக இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெயபால்ரெட்டி கூறியதாவது: டீசல், கியாஸ் விலை உயர்வு தற்போது கடினமன தருணம் தான். விலை உயர்வு தவிர்க்க முடியாதது. ஆனாலும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுமா என்பது எனக்கு தெரியவில்லை என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE