பொது செய்தி

தமிழ்நாடு

வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

Added : ஆக 04, 2010 | கருத்துகள் (57)
Share
Advertisement
சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின்
வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை

சென்னை : ""வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஆணையம் கவனம் கொண்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின் இணைப்பு பெற முடிவு செய்யும்போது, மேம்பாட்டுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வாடகைதாரர் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்கள் சுமையைக் குறைக்கவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறி, வீட்டின் உரிமையாளர்கள் சிலர்,  வாடகைதாரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு இருந்தால், அதிக பட்சமாக யூனிட்டுக்கு 4.05 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும்.  பயன்பாடு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால், அளவீட்டைப் பொருத்து ஒரு யூனிட்டுக்கு 2.20, 1.50 ரூபாயும், 80, 70 பைசா மட்டுமே வசூலிக்க முடியும்.  இதற்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோத செயல். விதிமுறை மீறி கட்டணம் வசூலித்தால், 2003ம் ஆண்டு, மின்சாரத் சட்டம் 142, 146 பிரிவுகளின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கத்தக்க குற்றம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், கோர்ட்டில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராம்ஜி - coimbatore,இந்தியா
05-ஆக-201019:49:00 IST Report Abuse
ராம்ஜி திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது , . நன்றி திரு. பட்டுக்கோட்டையார் அவர்களே
Rate this:
Cancel
suresh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-201018:32:13 IST Report Abuse
suresh Welcome law in favour of the tenants. What does the government do to tenants - who do not pay rent regularly, damage the property of the house owner, agree for 3 people to stay but then 10 people stay etc. Let government specify the number of people who can live per square foot in a rented house to curtail the attrocities of the tenants. Additional members in a tenants family can reduce their per person rent, but increases load on the infrastructure and tend to over use and spoil them.
Rate this:
Cancel
கி மு சி சு மணி - Madurai,இந்தியா
05-ஆக-201018:28:12 IST Report Abuse
கி மு சி சு மணி சார், அதெல்லாம் சரிதான், இப்பவெல்லாம் எந்தவகைலாவது மறுப்பு தெரிவித்து கோர்ட்டுக்கு போகிற ஆசாமிகளுக்கு மூன்று மாதம் டைம் கொடுத்து குண்டர்களை விட்டு காலிசெய்து விட்டு வருகிற புதிய நபர்களிடம் புதிய வாடகையுடன் அதிக மின்கட்ணத்தையும் வசூல் பண்ற அரசியல் செல்வாக்குள்ள ஒனர்களை தடுக்க தனி சட்டம் கொண்டு வர முடியுமா முடியாது ஏன்னா அவரோட மச்சான் மந்திரியா அல்லது அவருக்கின நெருங்கின சொந்தமா இருப்பாருங்கோ? அப்ப என்ன செய்வீக? ஏட்டு சட்டமெல்லாம் இதோட சரிங்கோ? இருந்தாலும் ஏதோ ஆறுதலாக மக்களை சமாளிக்கறதும் நல்ல விஷயம் தானே? பாராட்டுவோமே. நன்றியும் வாழ்த்துக்களும். கிமுசிசு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X