தமிழ்நாடு

ஒன்றிய தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Added : மே 24, 2010
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய அளவில் நாளை (மே 25) துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது.


தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செங்குட்டுவன் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாள் விழா நடத்துவது குறித்தும், கோவையில் நடக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்தும் விவாதிக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் நாளை முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு காவேரிப்பட்டணம் ஒன்றியம் மற்றும் பேரூர், மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. 26ம் தேதி காலை 10 மணிக்கு ஊத்தங்கரை ஒன்றியம் மற்றும் பேரூர், மாலை 2 மணி மத்தூர் ஒன்றியம், மாலை 4 மணி பர்கூர் ஒன்றியம் மற்றும் பேரூர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு தளி ஒன்றியத்திலும், மாலை 3 மணிக்கு கெலமங்கலம் ஒன்றியம் மற்றும் பேரூர், 28ம் தேதி காலை 10 மணிக்கு ஓசூர் ஒன்றியம் மற்றும் மத்திகிரி பேரூர், மாலை 2 மணிக்கு ஓசூர் நகரத்திலும் கூட்டம் நடக்கிறது. 29ம் தேதி காலை 10 மணிக்கு சூளகிரி ஒன்றியத்திலும், மாலை 2 மணிக்கு வேப்பனப்பள்ளி ஒன்றியம், 30ம் தேதி காலை 10 மணிக்கு கிருஷ்ணகிரி நகரத்தில் கூட்டம் நடக்கிறது. ஒன்றிய நகர கூட்டங்களை சம்மந்தப்பட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் கலந்து பேசி, துண்டு பிரசுரங்கள் அச்சடித்து விநியோகித்து அனைத்து கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகையில் கூட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X