தமிழ்நாடு

விதை மூடையை தரையில் அடுக்கினால் முளைப்பு திறன் குறைமென எச்சரிக்கை

Added : மே 24, 2010
Advertisement

தஞ்சாவூர்: ""விதை மூடைகளை வெற்றுத்தரையில் அடுக்கி வைத்தால் அதன் முளைப்பு திறன் பாதிக்கும்,'' என தஞ்சை விதைச்சான்று உதவி இயக்குனர் ஞானசேகரன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
விவசாயிகள் பயறு விதைகளை தானியத்துக்காகவும், விதைக்காகவும் சேமிப்பது உண்டு. விதைகளை பூசானக் கொல்லி மருந்து கலந்து சேமித்தால் அவற்றை தானியத்துக்காக பயன்படுத்த முடியாது. மருந்து கலந்து சேமிக்காவிட்டால் விதைகள் பயறு வண்டுகளால் பாதிக்கப்படும். எனவே, விதைகளை தானியத்துக்காகவும், விதைக்காகவும் சேமிக்க வேண்டும் எனில் அவற்றை ஊக்குவிக்கப்பட்ட களிமண் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைக்காக பயன்படுத்தும் பயறு வகை பத்து முதல் எட்டு சத ஈரப்பதம் வரை காய வைக்க வேண்டும். அதன்பின், ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் காப்டான் பூசனக்கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து சேமிக்க வேண்டும். விதைகளை கிடங்குகளில் சேமித்து வைக்கும்போது சாக்குப்பைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஆறு வரிசைக்கு மேல் அடுக்காமல் இருக்க வேண்டும்.
அதிகப்பட்சமாக அடுக்கினால் மேலே உள்ள மூடைகளின் பாரம் அடியிலுள்ள மூடைகளை போட்டு அழுத்துவதால் அடி மூடைகளில் உள்ள விதைகளின் முறைப்புத்திறன் பாதிக்கும். விதை மூடைகளை வெறும் தரையின் மேல் அடுக்கி வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால், தரை மற்றும் சுவற்றில் உள்ள ஈரப்பதம் விதைகளில் ஊடுருவி முளைக்கும் திறனை பாதிக்கும். விதை மூடைகளை மரக்கட்டையின் மீது அல்லது தார்ப்பாய்களின் மீது அடுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.·


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X