தமிழ்நாடு

அரியலூரில் மாவட்ட அளவிலான இருப்பிட விளையாட்டு பயிற்சி முகாம்

Added : மே 24, 2010
Advertisement

அரியலூர்: அரியலூரில் மாவட்ட அளவிலான இருப்பிட விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அரியலூர் மாவட்ட அளவிலான இருப்பிட விளையாட்டு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடந்தது. சர்வதேச அளவில் நøபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, பதக்கங்களை பெறக்கூடிய அடிப்படை திறமைகளை இயற்கையாக இளமையில் பெற்றிருக்கும் மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.


கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் பத்து இடங்களை பெற்றவர்களுக்கு, கல்வி மாவட்ட அளவில் ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, அதில் தேர்வு பெற்ற மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர். இப்பயிற்சி முகாமில் 63 மாணவர்களும், 15 மாணவிகளும் பங்கேற்றனர்.


மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து, கையுந்துபந்து, கூடைபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து, பளுதூக்கும் பயிற்சி மற்றும் தடகளம் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி வழங்கப்பட்டன. பயிற்சி முகாமில் தங்கும் வசதியுடன் விளையாட்டுக்கு தேவையான ஊட்ட சத்துள்ள உணவுகளும் வழங்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு விழாவில், மாவட்ட விளையாட்டு அலுலவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். விழாவில் பங்கேற்று தலைமை வகித்த அரியலூர் டி.ஆர்.ஓ., பிச்சை, முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கான சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X