பொது செய்தி

தமிழ்நாடு

சாதனை விளக்க பிரச்சார கூட்டம்

Added : செப் 25, 2012
Share
Advertisement
கும்பகோணம்: செம்மங்குடியில், கிராம விழிப்புணர்வு பிரச்சாரக்கூட்டம் நடந்தது.திருவிடைமருதூர் ஒன்றியம், செம்மங்குடி கடைவீதியில், அ.தி.மு.க., மாணவரணி சார்பில், ஓராண்டு சாதனை விளக்க பிரச்சார கூட்டம் நடந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய்ஆனந்த் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான அசோக்குமார் வரவேற்றார்.கூட்டத்தில், மாநில மாணவரணி செயலாளர்

கும்பகோணம்: செம்மங்குடியில், கிராம விழிப்புணர்வு பிரச்சாரக்கூட்டம் நடந்தது.
திருவிடைமருதூர் ஒன்றியம், செம்மங்குடி கடைவீதியில், அ.தி.மு.க., மாணவரணி சார்பில், ஓராண்டு சாதனை விளக்க பிரச்சார கூட்டம் நடந்தது.மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய்ஆனந்த் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய செயலாளருமான அசோக்குமார் வரவேற்றார்.கூட்டத்தில், மாநில மாணவரணி செயலாளர் சரவணப்பெருமாள் பேசியதாவது:தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், ஒரு பெண் தனியாக எவ்வித பயமின்றி வெளியில் செல்ல முடியும். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற உடனேயே, கலவரக்காரர்கள், சமூக விரோதிகள் ஓடி ஒளிந்துவிட்டனர். ஐந்து ஆண்டுகளில் செய்வதாக வாக்குறுதியளித்த அனைத்து திட்டங்களையும், 16 மாதத்தில் செய்து கொடுத்துள்ளார்.தமிழகத்தில், ஒரு லட்சத்து, 67 ஆயிரம் ஏக்கர் நிலங்களை, 60 ஆயிரத்து, 733 பேர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். நீர்நிலைகளை பாதுகாக்க, சாட்டிலைட் மூலம் படம் எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வீணாகாமல், முழுவதையும் பயன்படுத்தும் வகையில், தொலைநோக்கு திட்டம் தயாராகி வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
மாநில மாணவரணி துணை செயலாளர் பாபு, மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதிமோகன், தவமணி, திருபுவனம் பாஸ்கர், புதூர் சேகர் உள்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் நகர மாணவரணி செயலாளர் சரவணன், ஒன்றிய பேரவை செயலாளர் தங்கநடராஜன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செம்மங்குடி முத்துகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர்கள் வேலங்குடி சரவணன், மாத்தூர் சார்லஸ், திருநரையூர் பாண்டியராஜன், மலையப்பநல்லூர் மெலிக்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், ஜெயந்தி, பட்டம்மாள், வளர்மதி, சரிதா, செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் ஜெகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏனநல்லூர் மனோகரன், நாச்சியார்கோவில் கண்ணன், இஞ்சிக்கொல்லை பிரியதர்ஷினி, திருச்சேறை வெண்ணிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, நாச்சியார்கோவில், திருநரையூர் ஆகிய இடங்களில் கிராம விழிப்புணர்வு பிரச்சார கூட்டங்கள் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X