சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் வெவ்வேறு சம்பவம் மாணவர் உட்பட 3 பேர் தற்கொலை

Added : செப் 26, 2012
Advertisement

திருச்சி: கல்லூரி மாணவர் உட்பட, மூன்று பேர் வெவ்வேறு சம்பவங்களில் தற்கொலை செய்து கொண்டனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காட்டுக்குடிப்பட்டியைச் சேர்ந்த சிவக்குமார் மகன் விக்னேஷ், 18. தாய், தந்தை இல்லாத சிவக்குமார், திருச்சி பிராட்டியூர் ஆக்ஸ்ஃபோர்டு இன்ஜினியரிங் கல்லூரி விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்தார்.நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு போராடிய அவரை, சக மாணவர்கள் மீட்டு, மாருதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.*தொழிலாளி தற்கொலை: திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து, 28. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. குடிப்பழக்கத்துக்கு அடிமையான காளிமுத்துவை, சங்கீதா கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக, காளிமுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தில்லைநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.* தஞ்சை மாவட்டம் தோகூர் புதுத்தெருவைச் சேர்ந்த சங்கிலிமுத்து மகன் பிரபாகரன், 31, கட்டிடத்தொழிலாளி. இவருக்கும், திருவெறும்பூர் அடுத்த வேங்கூரை அடுத்த முருக்குப்பட்டியை சேர்ந்த சித்ராவுக்கு, கடந்த, இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது.மாமியார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்த பிரபாகரனுக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என்று கூறப்படுகிறது. சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் விரக்தியடைந்த பிரபாகரன், 20ம் தேதி தீக்குளித்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். திருவெறும்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X