ஜெயக்குமாரிடம் இருந்து சபாநாயகர் பதவி பறிப்பு: அமைச்சர்களையும் மாற்றம் செய்ய ஜெ., முடிவு? - Jayalalitha | TN Assembly speaker D.Jayakumar resigns | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (112)  கருத்தை பதிவு செய்ய

சென்னை:தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து, ஜெயக்குமார், ராஜினாமா செய்தார். சமீபத்தில், ஜெயக்குமார் கொண்டாடிய தனது பிறந்த நாள் விழாவால் ஏற்பட்ட சர்ச்சை தான், இந்த பதவி பறிப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, தமிழக அமைச்சர்கள் பலரின் பதவியும் பறிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழக சட்டபையின் வைர விழா, வரும் 29ம் தேதி, கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் நடந்து வரும் நிலையில், ஜெயக்குமார், நேற்று திடீரென தன் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, துணை சபாநாயகர் தனபாலிடம், நேற்று காலை அளித்தார். அக்கடிதத்தை ஏற்றுக் கொண்ட துணை சபாநாயகர், கவர்னருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, சபாநாயகருக்கான பணிகளை, தனபால் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சட்டசபை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழக சட்டசபையின் சபாநாயகராக இருந்த ஜெயக்குமார், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தின் 180வது விதியின் படி, சபாநாயகர் பதவி காலியாக உள்ளதால், துணை சபாநாயகர் தனபால், சபாநாயகரின் பணிகளை மேற்கொள்வார்.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் ராஜினாமா?சபாநாயகராக இருந்த ஜெயக்குமார், ராஜினாமாவிற்கு, பல்வேறு பின்னணி காரணங்கள் கூறப்படுகின்றன. அவரது பிறந்த நாள் கொண்டாட்டம், முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 18ம் தேதி, ஜெயக்குமார் தன் 52வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இவ்விழாவிற்காக சென்னை, ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள், பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து அமர்க்களப்படுத்தினர். வெற்றிவேல் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், சென்னையில் அன்று இருந்த ஆறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.வடசென்னை மாவட்டச் செயலர் வெற்றிவேல் உட்பட பல எம்.எல்.ஏ.,க்கள், ஜெயக்குமாருக்கு அதிகளவில் பொருட்களை பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவரம் அனைத்தும், உளவுத் துறையினரால் சேகரிக்கப்பட்டு, சமீபத்தில் கார்டன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், இவ்விழாவில் கலந்து கொண்டவர்கள், அவர்களுடன் ஜெயக்குமாருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும், முதல்வரிடம் உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழாவில், ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சிலர், "அடுத்த முதல்வர்' என்று குறிப்பிட்டு பேனர்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, கடந்த சில தினங்களாக, அவரது ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடசென்னை தெற்கு மாவட்ட செயலராக இருந்த புரசை கிருஷ்ணன், மூர்த்தி, கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட 12 பேர், கட்சியை விட்டே நீக்கப்பட்டுள்ளனர்.இது தவிர, ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த இவரது ஆதரவாளர்களில், தி.மு.க.,வில் இருந்து வந்து சேர்ந்த இருவர், மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.இவர்கள், ஜெயக்குமாரின் பெயரைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், புகார்கள் வந்தும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் ஜெயக்குமார் பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை, உளவுத் துறையினர் மூலம் ஆய்வு செய்து, அறிக்கை பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கட்சித் தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, ஜெயக்குமார் ராஜினாமா செய்தார். சபாநாயகரின் பிறந்த தின விழா குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்த சிலரை, முதல்வர் அழைத்து, விசாரணை நடத்திய பின், கட்சியினர் நீக்கம் குறித்த அறிவிப்பும், ஜெயக்குமாரின் ராஜினாமாவும் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டசபையின் வைர விழா நடக்க உள்ள நிலையில், அதை நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள சபாநாயகரே, திடீரென ராஜினாமா செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்கள், இதனால் பீதியடைந்துள்ளனர். புது சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளதால், அமைச்சரவையிலும் விரைவில் பெரிய அளவு மாற்றம் இருக்கும் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நான்கு முறை எம்.எல்.ஏ.,:ஜெயக்குமார், சட்டசபைக்கு நான்கு முறை தேர்வு செய்யப்பட்டவர். இரண்டு முறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.சென்னையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், வழக்கறிஞராகப் பணியாற்றியவர். ராயபுரம் சட்டசபைத் தொகுதியிலிருந்து 1991, 2001, 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மீன் வளம், பால் வளம் மற்றும் வனத் துறை அமைச்சராகவும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மின்சாரம், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.கடந்த 2011ம் ஆண்டு, சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டபோது, 14வது சட்டசபையின்

Advertisement

ராஜினாமா செய்த சபாநாயகர்கள்:பதவிக்காலம் முடியாமல், தமிழக சட்டசபை சபாநாயகர்கள் இருவர், இதற்கு முன் பதவிகளை இழந்துள்ளனர். இருவரும், கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியின்போது சபாநாயகர்களாகஇருந்தவர்கள்.அண்ணாதுரை ஆட்சியின்போது, சபாநாயகராக இருந்த சி.பா.ஆதித்தனார், அண்ணாதுரை மறைவுக்குப் பின், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கருணாநிதி தலைமையிலான அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆதித்தனார், 1967ம் ஆண்டு மார்ச் 17 முதல் 1968ம் ஆண்டு ஆக., 14ம் தேதி வரை சபாநாயகராக இருந்தார். தி.மு.க., பிளவுபட்டு, அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவங்கியபோது, கருணாநிதி தலைமையிலான ஆட்சியில், சபாநாயகராக இருந்தவர் கே.ஏ.மதியழகன். அவர் எம்.ஜி.ஆரை., ஆதரித்ததால், அவரிடமிருந்த சபாநாயகர் பதவியைப் பறிக்க, 1972ம் ஆண்டு நவ., 14ம் தேதி, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சபாநாயகர் மதியழகன், சட்டசபையை, டிச., 5ம் தேதி வரை ஒத்திவைத்தார்.இந்நிலையில், துணை சபாநாயகரை கொண்டு டிச., 2ம் தேதி, சட்டசபையை தி.மு.க., கூட்டியது. கூட்டத்தில், சபாநாயகராக இருந்த மதியழகனும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.சபாநாயகர் மீது, நெடுஞ்செழியன் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம், எதிர்ப்பே இல்லாமல் (176 - 0) நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் பதவியிலிருந்து மதியழகன் நீக்கப்பட்டார். 1971ம் ஆண்டு மார்ச் 24 முதல் 1972ம் ஆண்டு டிச., 2ம் தேதி வரை, மதியழகன் சபாநாயகராக இருந்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (112)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nsathasivan - chennai,இந்தியா
30-செப்-201221:46:37 IST Report Abuse
nsathasivan துக்ளக் ஆட்சியில் இப்படி அடிக்கடி நடப்பது சகஜம் தான் ? இதை ஏன் பெரிது படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
moorthy - sydney,ஆஸ்திரேலியா
30-செப்-201221:25:28 IST Report Abuse
moorthy இந்த நிலையில்தான் முதல்வர் ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதி தனது பதவியை உதறியுள்ளார் ஜெயக்குமார். இதுதான் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது. இதுவரை ஜெயலலிதாவுடன் கோபம் கொண்டு யாரும் பதவி விலகியதில்லை என்பதால் ஜெயக்குமாரின் செயல் அதிமுகவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் தன்னை நம்பியுள்ள ஆதரவாளர்களை ஜெயலலிதா நீக்கியதாலும், தன் மீது அவருக்கு நம்பிக்கை போய் விட்டதாலும் கோபமடைந்தே அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. சட்டசபையி்ன் வைர விழாக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் சபாநாயகர் இல்லாவிட்டால் பெரும் அசிங்கமாகி விடும் என்பதால் புதிய சபாநாயகரைத் தேர்வு செய்யும் வேலையில் ஜெயலலிதா மும்முரமாகியுள்ளார். அடுத்த சபாநாயகர் யார் என்பதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த், ஸ்டாலின் போன்றோரை சமாளிக்கும் வகையிலான ஒருவரை நியமிக்கவே முதல்வர் ஜெயலலிதா விரும்புவதால் யாருக்கு சபாநாயகர் பொறுப்பு கிடைக்கும் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சான்ஸ் கிடைக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kuppusami Poongavanam - VELLORE,இந்தியா
30-செப்-201221:05:25 IST Report Abuse
Kuppusami Poongavanam இதைத் தான் கூடா நட்பு என்றார் கலைஞர். நாம ஒப்பு கொள்வோமா?
Rate this:
Share this comment
Cancel
parthi - chennai,இந்தியா
30-செப்-201220:12:52 IST Report Abuse
parthi அரசியல இதெலாம் சாதாரணம் பா.................
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
30-செப்-201220:03:37 IST Report Abuse
Cheenu Meenu அ தி மு க அரசு என்ற திரை அரங்கில் மந்திரிசபை மாற்றம் விரைவில் வெளியிடப்படும் .
Rate this:
Share this comment
Cancel
Cheenu Meenu - cheenai,இந்தியா
30-செப்-201219:55:05 IST Report Abuse
Cheenu Meenu ஜெ....தான் பெரியார், அண்ணா, எம்.ஜி யார், தன்னுடைய உருவம் தவிர மற்ற யாருடைய போஸ்டரும் வரக்கூடாது என்று சென்ற மாதம் அறிக்கை கொடுத்தார்களே. அம்மா சொல் மிக்க மந்திரம் இல்லை என்று கட்சி இயங்கும் போது ஜெயக்குமார் போஸ்டர் அடித்து ஆடம்பரமாக அன்னை ஆணை இன்றி பிறந்த நாள் கொண்டாடலாமா? இனி இவர் செல் இழந்த டார்ச் லைட் தான்.
Rate this:
Share this comment
Cancel
Jabastin Antony - Villupuram,இந்தியா
30-செப்-201219:26:56 IST Report Abuse
Jabastin Antony நான் எல்லா சபாநாயகர்களையும் வெறுக்கிறேன் . அவர்கள் அனைவரும் அந்த கட்சிகளுக்கே ஜால்ரா போடும்போது வெறுப்பாக வரும்
Rate this:
Share this comment
Cancel
Shankar M - chennai ,இந்தியா
30-செப்-201219:18:43 IST Report Abuse
Shankar M ஒருவரை பதவியிலிருந்து இறக்க வேண்டுமானால் அவருக்கு எதிராக சதி செய்ய வேண்டியதில்லை, அதற்கு பதிலாக அவரை வருங்கால முதல்வர் அல்லது பிரதமர் என்று பாராட்டி போஸ்டர் அடித்தாலே போதும் என்கிற புதிய அரசியல் சாணக்கியத்தை அரசியல்வாதிகளுக்கு இவர் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-செப்-201217:37:49 IST Report Abuse
g.s,rajan மின்சாரத்தை உடனடியாக மத்திய மின் தொகுப்பில் இருந்து தமிழக மக்களுக்கு பெற்றுத்தர தலைவர் கோரிக்கை வைப்பாரா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை.
Rate this:
Share this comment
Cancel
Heman Yadav - இதம்பாடல்,இந்தியா
30-செப்-201216:59:58 IST Report Abuse
Heman Yadav ஜெயக்குமார் இனிமேல் முன்னாள் மந்திரி என்று கூட சொல்ல முடியாமல் கூழை கும்பிடு போடும் வரிசையில் நிற்க முடியாமல் ஓரம் கட்டப்படுவார் ஆனால் இனிமேலும் கட்சிக்காக நேர்மையாக உழைத்தால் மீண்டும் இதே பதவி கிடைக்கும். இது அதிமுக வில் மட்டுமே சாத்தியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X