மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வழக்கு: 2013- ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Updated : செப் 30, 2012 | Added : செப் 30, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை என தேர்தல் கமிஷன் ‌சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அடுத்த கட்ட விசாரணை 2013 ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால், ஓட்டளித்தவர் யாருக்கு அளித்தோம் என அறிய அச்சுகாகித முறையினை கொண்டுவரவேண்டும் . அல்லது பழைய முறையான ஓட்டுச்சீட்டு முறையினை கொண்டுவர வேண்டும் என ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியன்சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே 7-ம் தேதி தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டிருந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இந்த மனுவை முன்னுரிமை அடிப்படையில் சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றது.இதைத்தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இந்த மனு நீதிபதிகள் பி.சதாசிவம், ரஞ்சன் ‌கோகெய் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் தேர்தல் கமிஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் அசோக்தேசாய் வாதாடினார். அப்போது அவர் வாதிடுகையில், தகுந்த பாதுகாப்புடன் தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. மேலும் அனைத்துகட்சிகளின் கருத்துக்களையும், ஒப்புதலையும் பெற்று, தகுந்த தொழி்ல்நுட்ப வல்லுனர்கள் உதவியுடன், செயல்படுத்தப்பட்டுள்ளதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என வாதாடினார். இதைத்தொடர்ந்து இந்தவழக்கு வரும் 2013-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gunasekaran - pudhucherry,இந்தியா
30-செப்-201221:45:34 IST Report Abuse
Gunasekaran அட மட சாமியோவ்...அதுக்குள்ளே தேர்தல் வந்திடுமே ...வரும்...ஆனா வராது..
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
30-செப்-201217:58:37 IST Report Abuse
g.s,rajan வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு உள்ளாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றங்களை செய்ய உச்ச நீதி மன்றம் மக்கள் நலன் கருதி வழக்கை கால தாமதம் செய்யாமல் விரைந்து நடத்தி தனது தீர்ப்பை வழங்க வேண்டும் .செய்யுமா? இல்லையேல் நமது அரசியல்வாதிகளுக்கு கொண்டாட்டம் தான் ஜி.எஸ்,ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X