பொது செய்தி

இந்தியா

காமன்வெல்த் ஊழல்: 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' : பொருளாளர் திடீர் ராஜினாமா

Added : ஆக 06, 2010 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி : ஊழல் புகார் காரணமாக காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்பு கமிட்டி ஆட்டம் கண்டுள்ளது. லண்டன் நிறுவனத் துடன் ஏற்பட்ட நிதிமுறைகேடு தொடர் பாக 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' செய்யப் பட்டனர். ஆஸ்திரேலிய நிறுவனத்துடனான "ஸ்பான்சர்' ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. டென்னிஸ் ஆடுகளம் அமைப்பது குறித்த சர்ச்சையில் சிக்கிய அனில் கண்ணா, தனது பொருளாளர் பதவியை ராஜினாமா
காமன்வெல்த் ஊழல்: 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' : பொருளாளர் திடீர் ராஜினாமா

புதுடில்லி : ஊழல் புகார் காரணமாக காமன்வெல்த் போட்டிக்கான ஒருங்கிணைப்பு கமிட்டி ஆட்டம் கண்டுள்ளது. லண்டன் நிறுவனத் துடன் ஏற்பட்ட நிதிமுறைகேடு தொடர் பாக 3 அதிகாரிகள் "சஸ்பெண்ட்' செய்யப் பட்டனர். ஆஸ்திரேலிய நிறுவனத்துடனான "ஸ்பான்சர்' ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. டென்னிஸ் ஆடுகளம் அமைப்பது குறித்த சர்ச்சையில் சிக்கிய அனில் கண்ணா, தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


டில்லியில் வரும் அக்டோபரில்(3-14) காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்க உள்ளது. இதற்கான மைதானங்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. காமன்வெல்த் ஜோதி துவக்க நிகழ்ச்சிக் காக, பிரிட்டனை சேர்ந்த ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எவ்வித "டெண்டரும்' கோராமல், சுமார் 3.27 கோடி ரூபாய் செலுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் சுரேஷ் கல்மாடி மறுத்தார். இது தொடர்பாக இவர் வெளியிட்ட "இ-மெயில்' ஆதாரங்கள் மோசடியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏ.எம்.பிலிம்ஸ் நிறுவனத்துடனான நிதி முறைகேடு பற்றி 3 நபர் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


அனில் ராஜினாமா: இதற்கிடையே நேற்று அதிரடி திருப்பமாக, டென்னிஸ் ஆடுகளம் அமைப்பது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொருளாளர் அனில் கண்ணா, தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது மகனுக்கு சொந்தமான நிறுவனம், டென்னிஸ் களத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றதே பிரச்னைக்கு காரணம். இது குறித்து இவர் கூறுகையில், ""நான் பொருளாளராக 2010, ஜனவரியில் தான் பொறுப்பேற்றேன். ஆனால், எனது மகனுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனத்துடன் 2009 டிசம்பரில் ஒப்பந்தம் செய்துள்ளனர். எனது மகன் "ரீபவுண்ட் ஏஸ் இந்தியா' என்ற நிறுவனத்தை சேர்ந்தவன். ஒப்பந்தம் பெற்றது "ரீபவுண்ட் ஏஸ் ஆஸ்திரேலியா' என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு நிறுவனத் துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனது மகனின் நிறுவனம் ஒரு காசு கூட பலன் பெறவில்லை. ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளுடன் என்னை தொடர்புபடுத்துவதை விரும்பவில்லை. தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தேன்,''என்றார்.


அதிரடி நடவடிக்கை: இந்தச் சூழலில் நேற்று டில்லியில் காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், ஊழல் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரிட்டன் நிறுவன சர்ச்சைக்கு காரணமாக கருதப்படும் கல்மாடியின் கூட்டாளிகளான தர்பாரி(ஒருங்கிணைப்பு கமிட்டியின் இணை இயக்குனர்), சஞ்சய் மொகிந்த்ரூ(ஒருங்கிணைப்பு கமிட்டியின் துணை இயக்குனர்), ஜெயச்சந்திரன்(நிதி மற்றும் கணக்கு) ஆகியோர் "சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


இது குறித்து காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொதுச் செயலர் லலித் பனோட் அளித்த பேட்டி: விசாரணை கமிட்டி அளித்த அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. லண்டனில் நடந்த காமன் வெல்த் ஜோதி துவக்க நிகழ்ச்சிக்கு பொறுப்பு வகித்தவர்கள் என்பதால், மூன்று பேரும் "சஸ்பெண்ட்' செய்யப் பட்டுள்ளனர். இது பற்றி மேலும் விசாரிக்கும்படி , அமலாக்கப்பிரிவினரை கேட்டுக் கொண்டுள்ளோம். அனில் கண்ணாவின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. புதிய பொருளாளராக ஏ.கே.மட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.


ஆஸி., ஒப்பந்தம் ரத்து: நிர்ணயித்த தொகையை குறிப்பிட்ட காலத்துக்குள் பெற்று தர தவறியதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் நிறுவனத்துடனான "ஸ்பான்சர்' ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இந்நிறுவனத்துக்கு ஒரு ரூபாய் கூட "கமிஷனாக' அளிக்கவில்லை. காமன்வெல்த் போட்டிக்காக பெறப்பட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். அரசின் எந்தவிதமான விசாரணைக்கும் தயாராக இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதே இலக்கு. ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி, காமன் வெல்த் போட்டி மிகச் சிறப்பாக நடக்க உள்ளது. இவ்வாறு லலித் பனோட் கூறினார்.


எங்கே கல்மாடி: காமன்வெல்த் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவர் சுரேஷ் கல்மாடி உடனடியாக பதவி விலக வேண்டு மென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று நிருபர்களை சந்திப்பதை இவர் தவிர்த்தார். இது குறித்து ஒருங் கிணைப்பு கமிட்டியின் பொதுச் செயலர் லலித் பனோட் கூறுகையில், ""சுமார் 1,500 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், சீனியர் மட்டத்தில் உள்ளவர்கள், கீழ் நிலையில் பணிபுரிபவர்களை நேரடி யாக கட்டுப்படுத்துவதில்லை. எனவே, கல்மாடி உள்ளிட்ட சீனியர்கள் அனைத்துக்கும் பொறுப் பேற்க முடியாது. தேவைப்பட்டால் மட்டுமே நிருபர்களை சந்திப்பார்,'' என்றார்.


கடவுள் இருக்கிறார்: காமன்வெல்த் போட்டிகளை கண் காணிக்க உயர்மட்ட கமிட்டி அமைக்க வேண்டுமென்ற மணி சங்கர் அய்யரின் கோரிக்கையை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் எம்.எஸ்.கில் நிராகரித்தார். இது குறித்து இவர் ராஜ்யசபாவில் கூறுகையில்,""போட்டிக்கு இன்னும் 57 நாட்களே உள்ள நிலையில் புதிதாக கமிட்டி அமைக்க வேண்டிய அவசிய மில்லை. ஊழல் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா மீது நம்பிக்கை வையுங்கள். கடவுள் நம்மோடு இருக்கிறார். போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதில் கவனம் செலுத்துவோம்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Divaharan - Tirunelveli,இந்தியா
06-ஆக-201014:03:21 IST Report Abuse
Divaharan India will get gold medal for scandal game. Please include this game in common (wealth) games.
Rate this:
Cancel
பாலாஜி - Singapore,சிங்கப்பூர்
06-ஆக-201011:44:56 IST Report Abuse
பாலாஜி இங்கு இருப்பவர்களில் எத்துனை பேர் ஊரில் இருந்துகொண்டே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வோட்டு போட்டவர்கள்... அவர்கள் மட்டும் கருத்து கூறுங்கள்.....
Rate this:
Cancel
shan - Chennai,இந்தியா
06-ஆக-201010:42:31 IST Report Abuse
shan நீங்க Toilet Tissue Papperiya rent க்கு எடுத்த ஆளுங்க எப்புடி return பண்ணுவிங்க போங்க உங்களுக்கு ஊழல்குட பண்ணவ தரியல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X