18 வயதிற்கு கீழ் உள்ளவர் வாகனம் ஓட்டினால் உரிமையாளர் கைது

Updated : ஆக 07, 2010 | Added : ஆக 06, 2010 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: "பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்' என, சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை நடப்பாண்டில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள்,

சென்னை: "பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்' என, சென்னை போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை போக்குவரத்து காவல்துறை நடப்பாண்டில் போக்குவரத்து விதிகளை மீறும் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் டூவீலர் ஓட்டிகள், குடிபோதை மற்றும் மொபைல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் விளைவாக இந்தாண்டில் கடந்த 5ம் தேதி வரையில் போக்குவரத்து விதி மீறல் வழக்குளில் பலர் சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக 5 கோடியே 11 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்லுதல், அதிக கட்டணம் வசூலித்தல், மீட்டர் போடாமல், சீருடை அணியாமல் ஓட்டுதல் என பல விதிமீறல்களில் ஈடுபட்ட, ஆட்டோ ஓட்டுனர்கள் மீது ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 716 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 6,856 வழக்குகள் பதியப்பட்டு, 89 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 651 பேரின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரையும் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டியதாக 1,199 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது தவிர, நிறுத்தக் கோட்டை தாண்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்கள் மீது போக்குவரத்து போலீசார் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது 18 வயதிற்கும் குறைவான பலர் வாகனங்களை ஓட்டி போலீசாரிடம் சிக்குவது வழக்கமாகி வருகிறது. இதனால் வாகன விபத்துகள் அதிகரிக்கிறது. 18 வயதிற்குட்பட்ட நபர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளரை கைது செய்வதுடன் அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். மேலும், ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்த வாகனமும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
07-ஆக-201020:29:04 IST Report Abuse
ரங்கராஜ் அமெரிக்காவில் ஒபாமா த வறுசெய்தாலும் போக்கு வரத்து விதிகளின் படி தண்டனை உண்டு..நீங்கள் தமிழ் நாட்டில் அவ்வாறு செயல் பட முடியுமா ? முடியாது;;;கொடைக்கானலில் நிறுத்த கூடாத இடத்தில் காரை நிறுத்திய ஆளுங்கட்சி பிரமுகர் போலிசை படுத்திய பாடு பத்திரிகை களில்படிக்கவில்லையா ?உதையும் வாங்கி விட்டு அதிகாரிகளால் சமாதானம் செய்யப்பட்டு வதால் போலீசார் ஒதுங்கி கொள்ளு கிறார்கள்; நம் நாட்டில் பேருக்கு தான் sattamum நடவடிக்கையும் .
Rate this:
Cancel
rose - ch,இந்தியா
07-ஆக-201017:08:59 IST Report Abuse
rose நல்ல முடிவு ஐய ஆனால் நாட்டில் நல்ல போலீஸ் அதிகரி இருகையில் சில ஆமற்றும் போலீஸ் இருக்கத்தான் செய்கிறார்கள்
Rate this:
Cancel
பாண்டியன் - PortHartcourt,நைஜீரியா
07-ஆக-201016:32:12 IST Report Abuse
பாண்டியன் எல்லாம் சரிதான் !!!பெரிய மனுஷன் மற்றும் உயர் அரசு அதிகாரிகளின் வீட்டு சின்ன பொண்ணுங்க வண்டிய ஓட்டுனா புடிப்பிங்களா ?அத மொதல்ல சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X