பொது செய்தி

தமிழ்நாடு

டிஎம்பி.,க்கு பி1பிளஸ் தரச்சான்று

Added : ஆக 08, 2010
Share
Advertisement
தூத்துக்குடி:  தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் வைப்புநிதி சான்றிதலுக்கு கிரிஸில் நிறுவனம் பி1பிளஸ் என்ற மிக உயர்ந்த தரவரிசையை அளித்துள்ளது.  இதுகுறித்து பாங்க்கின் வணிக வளர்ச்சி துறையின் பொது மேலாளர் செல்வன் ராஜதுரை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் வைப்புநிதி சான்றிதலுக்கு கிரிஸில்

தூத்துக்குடி:  தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் வைப்புநிதி சான்றிதலுக்கு கிரிஸில் நிறுவனம் பி1பிளஸ் என்ற மிக உயர்ந்த தரவரிசையை அளித்துள்ளது.  இதுகுறித்து பாங்க்கின் வணிக வளர்ச்சி துறையின் பொது மேலாளர் செல்வன் ராஜதுரை அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கின் வைப்புநிதி சான்றிதலுக்கு கிரிஸில் நிறுவனம் மிக உயர்ந்த தரவரிசையான பி1பிளஸ்-ஐ அளித்துள்ளது. கிரிஸில் நிறுவனம் என்பது அனைத்து நிறுவனங்களின் கடன் பத்திரம், மூலதன சந்தைப்பற்றிய தகவல்கள் மற்றும் பல்வேறு தொழில்துறையை உயர்தொழில் நுட்பத்துடன் ஆராய்ச்சி செய்து தரவரிசை செய்யும் நிறுவனமாகும். தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கானது வைப்புநிதி சான்றிதழ் மூலமாக ரூ.500 கோடி வைப்புநிதியை திரட்டவுள்ளது. கிரிஸில் நிறுவனத்தின் மிக உயர்ந்த தரவரிசையான பி1 பிளஸ் என்பது பாங்க் வைப்புநிதியை குறித்த காலத்தில் அசல் மற்றும் வட்டியுடன் திருப்பி செலுத்தும் திறன் மிக வலிமையானது என்பதை குறிக்கும். மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் பாங்க்கானது ஆரே õக்கியமான முதலீடு மற்றும் தேவையான சொத்துத்தன்மை பெற்றுள்ளது என்பதை இந்த தரவரிசை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X