சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்னமனூரில் நள்ளிரவில்கடைகளை உடைத்து திருட்டு

Added : அக் 31, 2012
Advertisement

சின்னமனூர்:சின்னமனூரில் நள்ளிரவில் இரண்டு பைனான்ஸ்கள் உட்பட ஐந்து கடைகளில் பூட்டை உடைத்து, 28 ஆயிரத்து 500 ரூபாயை கும்பல் திருடிச் சென்றது. தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக, ஹெல்மெட் கொள்ளையர்கள், டூ வீலர் திருடர்கள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இது தவிர பெரியகுளம், தேனி உட்பட பல இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவில் சின்னமனூர் பழைய பாளையம் ரோட்டில், அடுத்தடுத்த இரண்டு பைனான்ஸ்கள், அதை அடுத்துள்ள டெய்லர் கடையில், பூட்டை உடைத்து திருடிச் சென்றது. பாண்டியராஜன் பைனான்ஸ் நிறுவனத்தில் 14 ஆயிரம் ரூபாய், பரணி பைனான்ஸ் நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றனர். அடுத்து ஈஸ்வரன் டெய்லர் கடையில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மற்றொரு குடிநீர் கேன் விற்பனை செய்யும் கடையினை உடைத்து 500 ரூபாயும் திருடிச் சென்றனர். தொடர்ந்து அக்ரஹாரம் சென்று அங்குள்ள இரண்டு பைனான்ஸ்களை உடைக்க முயற்சி செய்த போது. ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் உடைத்த பூட்டை அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். ஒரே நாளில் ஐந்து கடைகளை உடைத்து திருட்டு நடந்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.சின்னமனூர் இன்ஸ்பெக்டர் வினோஜிதலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X