பொது செய்தி

இந்தியா

கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்

Added : நவ 07, 2012 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார். வருவாய்அரசின் வருவாயை விட, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, கடன் வாங்கி வருகிறது. இவ்வகையில், வரும்
திட்டம்

புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய்கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி தெரிவித்தார். வருவாய்அரசின் வருவாயை விட, செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு, வெளிச் சந்தையிலிருந்து, கடன் வாங்கி வருகிறது. இவ்வகையில், வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், கூடுதலாக, 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுஉள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதமாக இருக்கும் என, பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது. வருவாய் அதிகரிக்காத நிலையில், மானியம் உள்ளிட்ட செலவினங்கள் உயர்ந்து வருகிறது. இதனால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பட்ஜெட் மதிப்பீட்டின் படி, நாட்டின், நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 5.1 சதவீதமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்ட திட்டமிட்டிருந்தது.ஆனால், நிதிப் பற்றாக்குறை, 5.3 சதவீதமாக உயருமானால், அரசு, வெளிச் சந்தையிலிருந்து, 5.90 லட்சம் கோடி ரூபாய் கடன் திரட்ட வேண்டியிருக்கும். நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 3.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


பங்கு விற்பனை



நிதிப் பற்றாக்குறையை நீக்க, மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தது.ஆனால், பங்குச் சந்தை நிலவரம் நன்கு இல்லாததால், இதுவரை எந்த ஒரு பொதுத் துறை நிறுவனமும், பங்கு விற்பனையை மேற்கொள்ளவில்லை.மேலும், வரி வசூலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இதனாலும், நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ள முடியவில்லை என, நிதி அமைச்சகத்தின் அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amaresan - Bangalore,இந்தியா
08-நவ-201218:51:30 IST Report Abuse
Amaresan வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்தாலே கடன் வாங்க வேண்டியதில்லை...........
Rate this:
Cancel
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
08-நவ-201217:28:58 IST Report Abuse
raj tbm மக்களவை தேர்தலுக்குள் வேகமாக வாங்கி விடுங்கள் மா மேதைகள் ஆளும் நாடு கடன் கேட்டு நிற்கிறது இதற்க்கு ஏன் மெத்த படித்த மேதைகள்
Rate this:
Cancel
murali k - kochi,இந்தியா
08-நவ-201217:08:24 IST Report Abuse
murali k நமது மந்திரிகள் ச்விச்ஸ் பாங்கில் புதிதாக அக்கௌன்ட் ஆரம்பித்து இருப்பார்கள் போல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X