திருச்சூர்: பார்லிமென்ட் கூட்டுக்குழு (ஜே.பி.சி.,) முன், பிரதமரை சாட்சியாக அழைக்க சம்மன் அனுப்ப முடியாது; அதற்கு, முன்னுதாரணங்கள் இல்லை,'' என, ஜே.பி.சி., தலைவர், பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து, விசாரித்து வரும், பார்லிமென்ட் கூட்டுக்குழுவுக்கு, கேரளாவின், திருச்சூர் தொகுதி எம்.பி., பி.சி.சாக்கோ, தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பிரதமர், மன்மோகன் சிங், நிதியமைச்சர், சிதம்பரம் ஆகியோரை, சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று, பாரதிய ஜனதா கோரி வருகிறது.
பிரதமர் மற்றும் நிதியமைச்சரை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என, வலியுறுத்தி, பார்லிமென்ட் கூட்டுக்குழுவை, பாரதிய ஜனதா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.இந்நிலையில், இன்று, டில்லியில் மீண்டும், ஜே.பி.சி., கூடுகிறது. அது குறித்து, நேற்று, திருச்சூரில், பி.சி.சாக்கோ கூறியதாவது:ஜே.பி.சி., முன், பிரதமரை சாட்சியாக விசாரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை; எந்த காரணத்தைக் கொண்டும், அவருக்கு சம்மன் அனுப்ப முடியாது. இதற்கு முன் அமைக்கப்பட்ட, ஜே.பி.சி.,களில் சாட்சியாக, பிரதமர்கள் ஆஜராயினர் என்பதற்கு, எந்த முன்னுதாரணமும் இல்லை.
நிலைமையை கணித்து, நிதியமைச்சருக்கு வேண்டுமானால், சம்மன் அனுப்பப்படும். கூட்டுக்குழுவின் இன்றைய கூட்டத்தில், பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பங்கேற்பதாக கூறப்படுவதை வரவேற்கிறேன்.இவ்வாறு, சாக்கோ கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE