சிக்கிம் நீதிபதியானார் தினகரன்: வக்கீல்கள் புறக்கணிப்பு

Added : ஆக 10, 2010 | கருத்துகள் (1)
Advertisement

கேங்டாக்: சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பி.டி.தினகரன் நேற்று பதவியேற்றார். பதவியேற்பு விழாவை, இரண்டு வக்கீல் சங்கங்கள் புறக்கணித்தன. கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தவர் பி.டி.தினகரன். இவர் மீது, நில அபகரிப்பு உட்பட பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதையடுத்து, சிக்கிம் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டார்.  கேங்டாக்கில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடந்த விழாவில், அவர் பதவியேற்றார். அவருக்கு சிக்கிம் கவர்னர் பால்மீகி பிரசாத் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் மாநில முதல்வர் பவன்குமார் சாம்லிங், அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.  அதேநேரத்தில், சிக்கிம் பார் அசோசியேஷன் மற்றும் சிக்கிம் ஐகோர்ட் பார் அசோசியேஷனின் உறுப்பினர்கள், பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். அவர்கள் கூறுகையில், "நீதிபதிக்கு எதிராக இச்செயல் இல்லை. ஆனால், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழுவும், அரசும் செய்கிற செயல் நீதித்துறைக்கு உகந்தது அல்ல என்பதால் புறக்கணித்தோம்' என்று கூறினர். வக்கீல்கள் சங்கத்தின் முக்கிய அமைப்பு இப்புறக்கணிப்பில் பங்கேற்றது குறித்து கருத்து தெரிவித்த  நீதிபதி தினகரன்," என்னைப் பற்றி ஏதேதோ  சொல்லப்படுகிறது; அத்தனையும் பொய். இம்மாதிரி சம்பவங்களை நான் ஏற்கனவே சந்தித்திருக்கிறேன்' என்று அமைதியாக பதிலளித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரங்கராஜ் - losanglesusa,இந்தியா
10-ஆக-201006:26:19 IST Report Abuse
ரங்கராஜ் யாவரை போன்ற நீதிபதி களுக்கு குறைந்தது கட்டாய ஒய்வு கொடுக்க வேண்டும் அல்லது கட்டாய விடுப்பு அளிக்கலாம் ..சட்டத்தில் இடமில்லை என்பதற்காக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்வது எந்தவகையிலும் நல்லதல்ல .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X