கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெடிபொருட்களை பதுக்கிய வழக்கில் ஏர்வாடி காசிமிற்கு ஐந்தாண்டு சிறை

Added : ஆக 10, 2010
Advertisement

பூந்தமல்லி : சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து, டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சி, கண்ணிவெடி, பைப் வெடிகுண்டு ஆகியவற்றை பதுக்கி வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.


சென்னை, புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் மஸ்தான் (50). கடந்த 1998ம் ஆண்டு இவர் வீட்டின் மாடியில் ஏர்வாடி காசிம், அஸ்ரப் அலி ஆகிய இருவரும் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர். இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்று, 10 நாட்கள் ஆகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மஸ்தான், இது குறித்து புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது 384 டெட்டனேட்டர்கள், 159 ஜெலட்டின் குச்சிகள், கண்ணாடி ஜாடியில் 3 கண்ணிவெடிகுண்டுகள், ஒரு பைப் வெடிகுண்டு ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வெடி பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில், கடந்த 1998ம் ஆண்டு மே 22ம் தேதி புளியந்தோப்பு போலீசார், ஏர்வாடி காசிமை கைது செய்தனர். அதே ஆண்டு ஜூன் 8ம் தேதி இந்த வழக்கு, பூந்தமல்லி, வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில், அனைத்து கட்ட சாட்சியங்களும் விசாரித்து முடிக்கப்பட்ட பின், நீதிபதி வணங்காமுடி நேற்று தீர்ப்பளித்தார். வெடிபொருட்கள் பதுக்கிய குற்றத்திற்காக ஏர்வாடி காசிமிற்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரான அஸ்ரப் அலி தொடர்ந்து தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X