பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை ஏமாற்றம் விவசாயிகள் கலக்கம்

Added : நவ 23, 2012
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பருவ மழை கைவிட்டதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், ஆண்டு சராசரி மழையளவு, 800 மி.மீ., ஆகும். பெரும்பாலான ஆண்டுகளில், சராசரி மழையளவு பெய்வது கிடையாது. இதனால், மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மாற்று தொழிலுக்கு மாறுவதுடன், வேலை வாய்ப்புக்காக அருகில் உள்ள சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களுக்கும், பெங்களூரு, கேரளா போன்ற மாநிலங்களுக்கும் வேலைக்குச் சென்றனர்.
மாவட்டத்தில் உள்ள பலர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிகளுக்கு சென்றனர். விவசாயத்தை கை விட விரும்பாத பலர், மாவட்டத்தில் பெய்து வரும் மழையளவிற்கு தகுந்த சொட்டு நீர் பாசன உள்ளிட்ட மாற்று தண்ணீர் சேமிப்பு பணிகளில் விவசாய பணிகளை தொடர்ந்து செய்து வந்தனர்.
இந்தாண்டு, தென்மேற்கு பருவ மழை கைவிட்டதை தொடர்ந்து, ஏமாற்றம் அடைந்த விவசாயிகள், வடகிழக்கு பருவமழை பெரிதும் நம்பி இருந்தனர். இதுவரை, தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருமழையும் போதிய அளவு பெய்யாத நிலையால், விவசாயிகள் மேலும் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X