பொது செய்தி

தமிழ்நாடு

தள்ளுவண்டி கடைகளில் முத்திரையில்லா எடைக்கல்

Added : நவ 23, 2012
Advertisement

தர்மபுரி நகரில் உள்ள தள்ளுவண்டி கடைகளில், எடை கற்களில் முறைகேடு நடந்து வருகிறது.
தர்மபுரியில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கடை வீதி, நேதாஜி பைபாஸ் சாலை, சின்னசாமி நாயுடு தெரு, ஹாசிம் மேஸ்திரி தெரு உள்ளிட்ட பகுதியில், ஏராளமான தள்ளுவண்டி பழக்கடைகள், கறிக்கடைகள், காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளன.
இப்பகுதியில், வியாபாரம் செய்யும் பெரும்பாலான வியாபாரிகள், முறையான முத்திரையிட்ட எடை கற்களை பயன்படுத்துவது இல்லை. இதனால், இவர்களிடம் வாங்கும் பொருட்களின் எடையளவு குறைந்துள்ளது.
வாங்கும் பொருளின் எடைகள் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்படுகிறது. தினந்தோறும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதியில் பொருட்களை வாங்கிச் செல்வதால், வியாபாரிகளுக்கு பொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்தை விட, எடை குறைவான எடைகற்களை பயன்படுத்துவதால் அதிக லாபத்தை முறைகேடுகள் மூலம் சம்பாதித்து வருவதாக, பொதுநல ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடும் வியாபாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X