அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு

Updated : நவ 30, 2012 | Added : நவ 29, 2012 | கருத்துகள் (3)
Share
Advertisement
அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு

ஷாங்காய்:""அனைத்து இதயங்களையும் ஒன்றிணைக்கும் சக்தி அன்புக்கு உண்டு,'' என சீனாவின் ஷாங்காய் நகரில் உரையாற்றிய மாதா அமிர்தானந்தமயி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலராக, கோபி அன்னன் இருந்த போது, "உலக நாகரிகங்களின் கூட்டமைப்பு' என்ற, பெயரில், ஆன்மிக பெரியவர்களின் சொற்பொழிவுகளுக்கு, உலக நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில், கேரளாவை சேர்ந்த, மாதா அமிர்தானந்தமயி, சீனாவின், ஷாங்காய் நகரில், நேற்று சொற்பொழிவாற்றினார்; இன்றும் உரையாற்றுகிறார்.


ஐ.நா.,வுக்கான சீன தூதர், ஷாங்காய் நகர துணை மேயர் உள்ளிட்டோர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். "கலாசார பகிர்வுகள் மூலம் ஒன்றுபடுதல்' என்ற தலைப்பில், மாதா அமிர்தானந்த மயி பேசியதாவது:"நாம் அனைவரும் ஒருவரே' எனக் கூறுபவர்கள், மற்றவர்களின் கலாசார பாரம்பரியத்தை மதிக்காத போது தான், ஒன்று பட்டு வாழ்தலில் முரண்பாடு ஏற்படுகிறது. ஆத்மார்த்தமாக, நாம் அனைவரும் ஒருவர் தான். இருப்பினும், உருவத்தால் பலராக இருக்கிறோம்.


மற்றவர்களின் கஷ்டங்களை போக்க முயற்சிப்பதன் மூலம் தான், ஒற்றுமை ஏற்படும். மற்றவர்களோடு நாம் தொடர்பு கொள்ளும் போது, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுச் செயல்படும் போது, நாம் இதயபூர்வமான தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.இவ்வாறு அமிர்தானந்த மயி பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivek - Chennai  ( Posted via: Dinamalar Android App )
30-நவ-201209:51:44 IST Report Abuse
Vivek Amma is great! Spirituality is India's great asset..
Rate this:
Cancel
Vadivel Gvl - johur ,மலேஷியா
30-நவ-201209:05:20 IST Report Abuse
Vadivel Gvl அன்பால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு அம்மா ஒரு உதாரணம் .... க.வடிவேல்.சின்னதச்சூர்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-நவ-201208:21:12 IST Report Abuse
Lion Drsekar அம்மா உங்களால் நம் நாட்டிற்குப் பெருமை. வாழ்க உங்கள் மனித நேயம், மக்கள் தொண்டு. வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X