பெண்ணிடம் செயின் பறிப்பு: கணபதிபாளையம், அமர்ஜோதி நகரை சேர்ந்த தேய்ஷ்குமாரின் மனைவி ரங்கீதாவர்மா,31. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலாவில் பணி புரிகிறார். பகல் 12.00 மணியளவில் வீட்டின் வெளியே நின்றிருந்தார். அப்போது, அவரிடம் முகவரி கேட்பது போல் வந்து பேசிய ஒரு வாலிபர், திடீரென
கத்தியைக் காட்டி மிரட்டி, கழுத்திலிருந்த 2.5 பவுன் தங்க சங்கிலியைப் பறித்து தப்பினான்.ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பைக் திருட்டு: வளையன்காடு பகுதியைச் சேர்ந்த பொன்ராம் மகன் வேலுசாமி, 25. தனது ஹீரோ ஹோண்டா பைக்கை காந்திநகரில் உள்ள ஒரு
பேக்கரி முன் நிறுத்திச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி பலி: தாராபுரம் அருகே கொளிஞ்சிவாடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 65. இவர் தனது மொபட்டில் கணபதிபாளையம், செட்டி அப்பச்சி கோவில் அருகே வந்த போது எதிரே வந்த மாருதி மோதியது. காயமடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயி ரிழந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேன் மோதி பலி: வெள்ளகோவில், சேனாபதி
பாளையத்தைச் சேர்ந்த சேமலை மகன்
சிதம்பரம், 46. பெட்ரோல் பங்க் அருகே சைக்
கிளில் வந்த போது எதிரே வந்த வேன் மோதியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை: அமராவதிபாளையம், சத்யா காலனியைச் சேர்ந்த ஆரான் மகன் ராமசாமி, 32. கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளதால், மனைவி பரிமளத்துடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பரிமளம், தாய் வீட்டுக்குச் சென்றதால், மன
முடைந்த ராமசாமி பூச்சி மருந்தைக் குடித்தார். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE