கொப்பரைக்கான தேவை அதிகரிப்பால் விலையேற்றம்

Added : டிச 15, 2012
Share
Advertisement
பொள்ளாச்சி:வெளிமார்க்கெட்டில், கொப்பரைக்கான தேவை அதிகரித்து வருவதால், விலையும் ஏற்றமடைந்துள்ளது. நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்திலும், கிலோவுக்கு இர ண்டு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.பொள்ளாச்சி அடுத்த நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடக்கும். இந்தவாரம் நடந்த கொப்பரை ஏலத்தில், நெகமம் சுற்றுப்பகுதி

பொள்ளாச்சி:வெளிமார்க்கெட்டில், கொப்பரைக்கான தேவை அதிகரித்து வருவதால், விலையும் ஏற்றமடைந்துள்ளது.
நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்திலும், கிலோவுக்கு இர ண்டு ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த நெகமம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் கொப்பரை ஏலம் நடக்கும்.
இந்தவாரம் நடந்த கொப்பரை ஏலத்தில், நெகமம் சுற்றுப்பகுதி விவசாயிகள் ஏலத்துக்கு கொப்பரையை கொண்டு வந்தனர்.
இதில், 26 விவசாயிகள் 113 மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர். ஏலத்தில், எட்டு வியாபாரிகள் பங்கேற்று ஏலம் எடுத்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சென்னியப்பன் ஏலம் நடத்தினார்.
முதல் தர கொப்பரை 85 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 42 ரூபாய் முதல் அதிகபட்சமாக 43.75 ரூபாய் வரை விலை கிடைத்தது.
இரண்டாம் தர கொப்பரை 28 மூட்டை ஏலம் விடப்பட்டதில், கிலோவுக்கு குறைந்தபட்சமாக 32 ரூபாய் முதல் அதிகபட்சமாக 38.60 ரூபாய் வரை விலை கிடைத்தது.
அதிகாரிகள் கூறியதாவது: வெளி மார்க்கெட்டில், கொப்பரைக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதல் விலையும் அதிகரித்து வருகிறது.
இதனால், விவசாயிகள் இருப்பு வைத்த கொப்பரையை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது, "நேபட்' கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏலத்துக்கு வரத்து அதிகரித்து
வருகிறது.இதில், முதல் தர கொப்பரை 25 மூட்டையும், இரண்டாம் தர கொப்பரை ஆறு மூட்டையும் அதிகரித்திருந்தது. வரத்து அதிகரித்துள்ள போதிலும், தே வை இருப்பதால் விலையும் அதிகரித்துள்ளது. வெளிமார்க்கெட்டிலும் கொப்பரை விலை அதிகரித்துள்ளதால், அதன் தாக்கம் ஏலத்திலும் பிரதிபலித்துள்ளது.
வெளிமார்க்கெட்டில், ஒரு கிலோ கொப்பரை 42 முதல் 44 ரூபாய் வரை ஏலம் போகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, இந்த வாரம் முதல் தர கொப்பரை குறைந்த பட்ச விலையில் 2.58 பைசாவும், அதிகபட்ச விலையில் கிலோவுக்கு 1.70 பைசாவும் அதிகரித்திருந்தது.
இரண்டாம் தர கொப்பரைக்கு குறைந்தபட்ச விலையில் ஐந்து ரூபாயும், அதிகபட்ச விலையில், 20 பைசாவும் அதிகரித்திருந்தது. பொங்கல் பண்டிகை முடியும் வரை கொப்பரைக்கான தேவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெளி மார்க்கெட்டில் வரத்தை பொறுத்து விலையில் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும். அதன் தாக்கம், வரும் வார ஏலத்தில் பிரதிபலிக்கும். விலையில் சரிவு ஏற்பட்டால், "நேபட்' கொள்முதல் துவங்க வாய்ப்புள் ளது.
இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X