சூலூர்:"இந்திய
பொருளாதார அணுகுமுறைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றை காப்பது நம் கடமை,'
என, தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய இயக்குனர் கனகசபாபதி பேசினார்.
சூலூர்
ஆர்.வி.எஸ்., மேலாண்மை கல்லூரியில், "நவீன இந்திய தொழில்களில் சமூக
பொருளாதார மாற்றம்' எனும் தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.
கல்லூரி டீன் ஆடலரசு வரவேற்றார். இயக்குனர் ராபின்சன் தலைமை வகித்தார்.
பெங்களூர் தனியார் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை
மேலாளர்அனந்தநாராயணன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு நகரியல் பயிற்சி மைய
இயக்குனர் கனகசபாபதி பேசியதாவது: நமது நாடு பழங்காலத்தில் வளமான நாடாகவும்,
கல்வியறிவு மிகுந்த நாடாகவும் இருந்துள்ளது. கல்வி, பொருளாதாரம்,
விஞ்ஞானத்தில் சாதனைகள் படைத்ததால், உலகில் மிகப்பெரிய சக்தியாக
வளர்ந்துள்ளது. உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நம் நாட்டில்
உள்ளது. இந்திய பொருளாதார அணுகுமுறைகள் தனித்தன்மை வாய்ந்தது.
அவற்றை
காப்பது நம் கடமை. குடும்ப சேமிப்பு என்பது ஆதி காலம் முதலே
நம்நாட்டில் உள்ளது. குடும்ப சேமிப்பு என்பது பொருளாதாரத்தின் அஸ்திவாரம்
ஆகும். கலாசாரம், பண்பாட்டில் மட்டுமில்லாமல் பொருளாதார முன்னேற்றத்தில்
நம் நாட்டின் பெண்கள் தனித்தன்மையுடன் செயல்படுகின்றனர்.இவ்வாறு, அவர்
பேசினார்.கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் குறித்து
விவாதிக்கப்பட்டன. கல்லூரி சார்பில், ஆராய்சிகள் குறித்த இதழ்
வெளியிடப்பட்டது. பேராசிரியர்கள் விசாகமூர்த்தி, சாமிநாதன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா நன்றி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE