கோவை:ஊர்க்காவல்
படையில் சேர்ந்து, பொதுச் சேவை செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் தனசேகரன் அறிக்கை:
ஊர்க்காவல்
படையில் சேர்ந்து, காக்கி சீருடையில் நாட்டிற்காக பொது சேவை செய்ய
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கோவை மாநகர பகுதியில் வசிக்கும்
ஆண்கள், பெண்கள், காந்திபுரம், காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திலுள்ள
ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். 19 வயது முதல் 45
வயதுக்கு உட்பட்டவர்கள், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ -3,
ரேஷன் கார்டு ஜெராக்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஜெராக்ஸ் போன்ற
ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு, மாநில அரசு,
பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி, மாநகராட்சி, தனியார் துறை மற்றும்
சொந்தமாக தொழில் செய்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE