தமிழ்நாடு

லாட்ஜ், ஓட்டல்களில் "சி.சி.டி.வி.,கேமரா கட்டாயம்:குற்றங்களை தடுக்க அரசு உத்தரவு

Added : டிச 25, 2012
Advertisement

சிவகங்கை:பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை தடுக்க, லாட்ஜ், ஸ்டார் ஓட்டல்கள், பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் சென்டர்களில்,"சி.சி.டி.வி.', கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், பொது இடங்கள், லாட்ஜ், ஸ்டார் ஓட்டல்களில் பெண்களை கேலி செய்தல், பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இக்குற்றங்களை தடுக்க, பொது இடங்கள்,வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் "சி.சி.டி.வி.,' கேமராக்கள் பொருத்த வேண்டும்.அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் விதிமுறைப்படி, "கேமராக்கள்' பொருத்தும் நிறுவனங்களுக்கு "லைசென்ஸ்' வழங்க வேண்டும்.
மேலும் மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை., உள்ளிட்ட அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நூறு மாணவர்களுக்கு மேல் தங்கும் மாணவ, மாணவியர் விடுதிகள், மருத்துவமனை, கிளினிக், மகப்பேறு மருத்துவமனை போன்று 500 சதுர மீட்டருக்கு மேல் உள்ள கட்டடங்களிலும் கேமரா பொருத்த வேண்டும்.லாட்ஜ்,ஸ்டார் ஓட்டல்கள், கல்யாண மகால், தியேட்டர், நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், கண்காட்சி, நடன பயிற்சி அரங்கம், பார், ஸ்டேடியம், வங்கிகள், ஏ.டி.எம்.,மையம், இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் பொருத்த வேண்டும். இது தவிர நகைக்கடைகள், "ஷாப்பிங்' சென்டர்கள்,பெட்ரோல் நிலையம், நூறு ஊழியர்களுக்கு மேல் பணியாற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள்,நூறு நபர்களுக்கு மேல் பணியாற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், நூலகம், கிளப் ரூம், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஸ் நிறுத்தப்படும் இடங்களில், கட்டாயம் "சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தவேண்டும், என அரசு கடுமையாக உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தை, மாவட்ட கலெக்டர், கூடுதல் போலீஸ் கமிஷனர், டி.எஸ்.பி., அந்தஸ்திலான, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இது தவிர, புதிதாக கட்டடம், வணிக நிறுவனம் கட்டுவோர், "சி.சி.டி.வி.', கேமரா பொருத்துவதற்கான பணிகளை செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது, உள்ளாட்சி துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் தயக்கம் காட்டக்கூடாதென, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமை செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், டிச.,14ம் தேதியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X