பொது செய்தி

தமிழ்நாடு

"வெங்காய சாகுபடியில் நாற்றங்கால் முறையாக அமைத்தால் மகசூல் கூடும்'

Added : டிச 26, 2012
Advertisement

உடுமலை : வெங்காய சாகுபடியில், நாற்றங்கால் முறையாக அமைத்தால்,
மகசூல் அதிகரிக்கும் என தோட்டக்கலைத்துறை அட்வைஸ் வழங்கியுள்ளது.
இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் அறிக்கை:
நீர் வள நில வள திட்டத்தின் கீழ், அமராவதி பாசனப்படுகை விவசாயிகளுக்கு வெங்காய விதைகள் தோட்டக்கலைத்துறை சார்பில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தோட்டக்கலைத்துறை சார்பில், ஒரே கொத்தில், 3 முதல் 5 காய் வரை நல்ல நிறமுடைய கோ. ஆன் 5., ரகம் அதிக மகசூலுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. தொழில் நுட்பங்களை முறையாக பின்பற்றினால், வெங்காய சாகுபடியில், ஏக்கருக்கு 9 டன் வரை மகசூல் பெற வாய்ப்புள்ளது.
டிச., மாதம் முதல் ஏப்., மாதம் வரை விதைத்து நாற்று தயாரித்து, 50 நாள் வயதுடைய நாற்றுகளை ஜன., மாதம் முதல் மே மாதம் வரை நடவு செய்யலாம். வெங்காய சாகுபடியில், அதிக மகசூல் பெற மணற்பாங்கான வண்டல் மண் ஏற்றதாகும்.
ஒரு ஏக்கருக்கு ஒன்றரை கிலோ தேவைப்படும். நாற்றங்கால் நன்கு அமைத்தால் தான் வெங்காய சாகுபடியில், நல்ல மகசூல் பெற முடியும். நூறு சதுர மீட்டர் நாற்றங்காலுக்கு, 150 கிலோ தொழு உரம்; 10 கிலோ மண் புழு உரம் மற்றும் இரண்டு கிலோ டி.ஏ.பி., உரத்தினை விதைக்கு முன் இட வேண்டும்.
நாற்று அழுகல் நோய் வராது தடுக்க விதைத்த 15 முதல் 25 வது நாளில், காப்பர் ஆக்சி குளோரைடு 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் தயாரித்த கரைசலை கொண்டு பாத்தியில் நனைக்க வேண்டும்.
இலைப்பேன் மற்றும் இலைக்கருகல் வராது தடுக்க 10 லிட்டர் தண்ணீருக்கு "புரொபென்பாஸ்' 20 மில்லி மற்றும் இண்டோபில் எம்., 45 மருந்தினையும் 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும். ஏற்கனவே வெங்காயம் பயிரிட்ட இடத்தில், மீண்டும் வெங்காயம் பயிரிட கூடாது. தோட்டக்கலைத்துறை பரிந்துரை அடிப்படையிலேயே மருந்துகளை பயன்படுத்த வேண்டும். தவறான மருந்து தெளித்தல் நஞ்சாக மாறி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X