அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதலாக 645 மெகா வாட் மின்சாரம்

Added : ஆக 13, 2010 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:""தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் இந்தாண்டு இறுதியில் 645 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்,'' என தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.சென்னையில், தேசிய அளவில் மூன்று நாள் நடக்கும் ஆறாவது மின்பொருள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில் மின்னணு தயாரிப்பு நிறுவனங்களின் மின்னணு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
new scheme for power, from 645 mw, to tamilnadu, minister veerasami,தமிழகத்திற்கு கூடுதலாக 645 மெகா வாட் மின்சாரம்

சென்னை:""தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம் இந்தாண்டு இறுதியில் 645 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்,'' என தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.சென்னையில், தேசிய அளவில் மூன்று நாள் நடக்கும் ஆறாவது மின்பொருள் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியில் மின்னணு தயாரிப்பு நிறுவனங்களின் மின்னணு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கண்காட்சியை, தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி துவக்கி வைத்து பேசியதாவது:மின்னணு சாதனம் மற்றும் மின்னணு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள புதுமைகளை இக்கண்காட்சி மூலம் அறிய முடிகிறது. சிறந்த தொழில் மேம்பாட்டு கொள்கையின் காரணமாக, பல வெளிநாட்டு கம்பெனிகள் தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றன.தற்போது, தமிழகம் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்து 214 மெகா வாட் மின் வினியோகிக்கும் திறன் பெற்றுள்ளது. புதிய மின் உற்பத்தி திட்டங்கள் மூலம், தமிழகத்திற்கு கூடுதலாக 6,576 மெகா வாட் மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், இந்தாண்டு இறுதியில் 645 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும்.இவ்வாறு வீராசாமி பேசினார்.


எழும்பூர், ராணி மெய்யம்மை மன்றத்தில் மூன்று நாள் நடக்கும் இந்த கண்காட்சியை, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தொழில் துறை சார்ந்தவர்களுக்கும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை பொது மக்களும் பார்வையிடலாம்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விஜய் - சென்னை,இந்தியா
14-ஆக-201015:06:42 IST Report Abuse
விஜய் யோவ் ஆற்காடு வீராசாமி, இன்னுமா இந்த ஊரு உன்ன நம்புது.இப்போ வரபோகும் தேர்தலில் 234 தொகுதியில நீர் எந்த தொகுதியில நின்னாலும் உம்ம மக்கள் விரட்டி அடிப்பாங்க. எல்லாத்தையும் விட்டுட்டு உன்னோட சொந்த ஊரான குப்பிடிசாத்தம் போய் பழைய வேலைய பாரும். எப்பவும் பழச மறக்ககூடாது.
Rate this:
Cancel
அருண்பாரதி - Muscat,ஓமன்
14-ஆக-201014:53:06 IST Report Abuse
அருண்பாரதி மின்வெட்டுதுறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இந்த வீர பேச்சுக்கள் வெறும் பேச்சோடு நின்று விடாமல் நடைமுறைபடுத்த பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
14-ஆக-201012:46:01 IST Report Abuse
adalarasan கொஞ்ச நாள் பேசாமல் இருந்திர்கள்! தயவு செய்து அப்படியே இருந்து விடுங்கள் .அனைவருக்கும் நன்மை !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X