ஆந்திராவிலும் அமைகிறது அமிர்தா பல்கலைக்கழகம்: முதல்வர் ரோசய்யா உத்தரவு

Added : ஆக 13, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஐதராபாத்:""அமிர்தா பல்கலைக் கழகம் அமைக்க ஐதராபாத்தில் 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்,'' என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்தார்.மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் கொச்சி, கோவை உட்பட பல இடங்களில் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ஆந்திர தலைநகர் ஐதராபாத்திலும் அமிர்தா பல்கலைக் கழகம் துவங்க மாதா அமிர்தானந்தமயி மடம் முடிவு செய்தது.பல்கலைக் கழகம்
ஆந்திராவிலும் அமைகிறது அமிர்தா பல்கலைக்கழகம்: முதல்வர் ரோசய்யா உத்தரவு

ஐதராபாத்:""அமிர்தா பல்கலைக் கழகம் அமைக்க ஐதராபாத்தில் 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்,'' என ஆந்திர முதல்வர் ரோசய்யா தெரிவித்தார்.மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் கொச்சி, கோவை உட்பட பல இடங்களில் கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், ஆந்திர தலைநகர் ஐதராபாத்திலும் அமிர்தா பல்கலைக் கழகம் துவங்க மாதா அமிர்தானந்தமயி மடம் முடிவு செய்தது.பல்கலைக் கழகம் அமைக்க நில ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மடத்தின் சார்பில் ஆந்திர மாநில முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.


அக்கோரிக்கையை பரிசீலித்த ஆந்திர அரசு, ஐதராபாத்தில் அமிர்தா பல்கலைக் கழகம் அமைக்க நிலம் ஒதுக்க முடிவு செய்துள்ளது.அமிர்தா பல்கலைக் கழகம் அமைக்க ரங்கா ரெட்டி மாவட்டத்தில் நிலம் ஒதுக்க மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமைக்க 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என முதல்வர் ரோசய்யா தெரிவித்தார்.இப்பல்கலைக் கழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு அதிநவீன வசதிகளை உள்ளடக்கிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவையும் இடம் பெறும்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜாராம் - சிவகாசி,இந்தியா
14-ஆக-201013:00:13 IST Report Abuse
ராஜாராம் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X