பதிவு செய்த நாள் :
கருத்துகள் (442)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சிங்கப்பூர்: டில்லியில் கற்பழிக்கப்பட்ட 23 வயது மருத்துவ மாணவி சிகி்ச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று அதிகாலையில் இறந்தார். அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை 3.30 மணிக்குபுதுடில்லி விமான நிலையத்திற்குவந்தது.புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
டில்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் மூடப்பட்டுள்ளன. பிரதமர், காங்., தலைவர் சோனியாஉள்துறை அமைச்சர் என பல தரப்பினரும இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று சோனியா டி.வி,க்கு அளித்த பேட்டியில்; குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவோம் என்றார். தானும் ஒரு தாய் என்ற முறையில் இந்த வேதனையை உணர்ந்திருக்கிறேன். மாணவியின் போராட்டம் வீணாகாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையில் ஜந்தர்மந்தரில் கூடிய போராட்டக்காரர்களை சந்திக்கும் ‌எண்ணத்தில் டில்லி முதல்வர் ஷீலாதீட்ஷித் வந்த போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரை மறித்து திருப்பி அனுப்பினர்.

கடந்த 16-ம் தேதியன்று டில்லியில் ஓடும் பஸ்சில் , ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்த போது மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட

அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர். இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட்எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார்.செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. உயிருக்கு போராடிய 13 நாட்கள்: மாணவி கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் ‌கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.
முன்னதாக மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கெல்வின் லோக் ,அதிகாலை 2.15 மணியளவில் மாணவி உயிரிழந்தது குறித்த தகவலை இந்திய தூதரகத்திற்கு தெரிவித்தார். இறந்த மாணவிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

மாணவி உடல் பிரேத பரிசோதனை:
உயிரிழந்த மருத்துவம மாணவியின் உடல் பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்‌கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனைக்கு பின் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதையடுத்து அந்நாட்டு இந்திய தூதரகத்துடன் இந்தியா அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

டில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு:
மருத்துவ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் போராட்டங்கள் நடந்து வரும்
Advertisement

நிலையில் மாணவி உயிரிழந்ததையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக 10 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன.போலீசார் குவிக்கப்பட்டு்ள்ளனர். இதனால் டில்லியில் பரபரப்பு காணப்படுகிறது. இந்தியா கேட், ரைசினா ஹில்ஸ் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதிக்கு செல்லும் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. ராஜ்பத், விஜய் சவுக், போன்ற பகுதிகளுக்கு செல்லும் பாதைகள்மூடப்பட்டதுடன், கமல் அட்டடுர்க் மார்க் பகுதியும் மூடப்பட்டதுடன், இந்த பகுதிகளை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைதி காக்க வேண்டுகோள்:
இந்த சம்பவத்தை அடுத்து அனைவரும் அமைதி காத்திட வேண்டும் என டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கிட அனைத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள்ன என்றார்.

மாணவியின் ஆச‌ை என்ன ? :
16 ம் தேதி தாக்குதலுக்குள்ளான மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போது முதன்முதலாக அவரை தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அவர் பேசுகையில்: நான் வாழ விரும்புகிறேன் அம்மா., என்னை இந்த கொடுமைக்கு ஆளாக்கிய இந்த நபர்களை சட்டத்தி்ன் முன் நிறுத்தி எனக்கு நீதி கிடைக்க வேண்டும் அம்மா என்றாராம்.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உடல் புதுடில்லி வந்தது.புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் வந்த போது மாணவியின் உடலை பார்க்க பிரதமர் மன்மோகன்சிங் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (442)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arulbalan Subramani - Chennai,இந்தியா
31-டிச-201211:51:49 IST Report Abuse
Arulbalan Subramani ஐயோ மிகவும் கொடுமையான விஷயம், இந்த செய்தி கேட்டதிலிருந்து நெஞ்சு தீ பற்றி எறிகிறது.. இது போன்ற நயவஞ்சகளுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்க வேண்டும், அதை இந்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த குமுறலுக்கு அரசு செவி கொடுக்குமா ?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
30-டிச-201222:23:48 IST Report Abuse
தமிழ்வேல் நண்பர்களே.....தயவு செய்து யாரும் இந்த விஷயத்தில் அரசியல் செய்யாதீர்கள்...நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Vinoth Kumar - al-Khor,கத்தார்
30-டிச-201218:47:40 IST Report Abuse
Vinoth Kumar அந்த அன்பு தங்கைக்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கள் தேரிவித்து கொள்கின்றேன் இப்படிக்கு தமிழான் வினோத்குமார் qatar
Rate this:
Share this comment
Cancel
gayathri - ramnad  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201216:07:32 IST Report Abuse
gayathri plz kill them unkindly and telecast that lively in all channels and thereby show this as a sample to those who have such intention on women and make them feel afraid to indulge in such acts......
Rate this:
Share this comment
Cancel
manikandan - Singapore  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201215:29:53 IST Report Abuse
manikandan அந்த அன்பு தங்கைக்கு என்னுடைய ஆழ்ந்த இறங்கள் தேரிவித்து கொள்கின்றேன் இப்படிக்கு தமிழான்
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
30-டிச-201211:29:55 IST Report Abuse
கோமனத்தாண்டி குற்றம் செய்த இந்த 6 நபர்கள் மீது மட்டும் தவறு கிடையாது, இந்தியாவில் உள்ள ஒரு ஒரு தனிமனித பங்கும் உள்ளது, எங்கு எல்லாம் கலாசார சீர் கெடும் , பாலியல் தூண்டும் ஆடை அலங்காரம் மற்றும் ஆபாச படம் மற்றும் விபசார விடுதி வந்தோ பொது எல்லாம் நாம் சும்மா இருந்தோம், உணர்ச்சியை தூண்டினோம், அதை தனித்து கொள்ளும் இடம் அருகில் இல்லை , அதனால் அவன் கிடைத்த இடத்தை பயன் படுத்தி கொண்டான், ஆரம்பத்தில் நாம் செய்த தவறு இந்த ஒரு கற்பழிப்பு மூலமாக நிற்க்காது, என்ன தான் சட்டம் போட்டாலும் இன்னமும் பல பெண்கட்பு சூறை ஆடபடுவதை யாரும் தடுக்க முடியாது, மாறாக சமுதாய சிந்தனை கொண்டு ஒரு ஒரு தனிமனிதன் திருந்தனும், நாகரீகம் என்கிற போர்வையில் நடக்கும் அக்கிரமங்களை தடுக்கணும், மதியில் காம மது உண்டவனுக்கு எல்லா பெண்களும் ஒன்றுதான், அந்த போதை அவனுக்கு கொடுத்தது நாம், சட்ட படி கொடுக்கும் தண்டனை இனி நடக்க போகும் தவறை திருத்தாது, ஒரு வேலை கற்பு அழிப்பவன் சுய பாதுகாப்பு கருதி, இனி கொலை செய்ய வேண்டும் என ஆழமாக சிந்திப்பான், ஆணும் பெண்ணும் கூட்டாக ஒழுக்கமுடன் உடை அணியணும், இது தான் ஆரம்பம், சினிமா ஆபாசம் வந்தால் அதை சீர்தூக்கி பார்க்கும் அறிவை நாம் இன்னனும் வளர்க்க வில்லை, நடிகை போல் நம்ம வீட்டு பெண்ணும் உடை அணிந்தால் நடிகை கற்பு காசுக்கு போவதை போல நம் வீட்டு பெண்கள் கற்பு ரோட்டில் போகும், காரணம் நாம் ,, திருந்துங்கடா ,,,
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Thanjavur,இந்தியா
30-டிச-201210:59:29 IST Report Abuse
Durai selvaraju அந்த இளம் ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன் . என்ன பாவம் செய்தாள் இந்த பெண்? ...மிக வருத்தம் தரும் செய்தி இது.... கல்லூரிக்கோ, பள்ளிக்கோ அனுப்பிவிட்டு வீடு திரும்பும் வரை வயிற்றிலே பெண்ணை பெற்ற தகப்பனும் தாயும் தீயில் நிற்பது போல இருக்கிறார்கள்.. நெருப்பை கட்டி கொண்டு இருக்க வேண்டி உள்ளது. நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை நிம்மதி இல்லாமல் ஆக்கிகொண்டுள்ளது. வெறும் மரண தண்டனை மட்டுமே தீர்வாகிவிடாது. தனி மனித ஒழுக்கம் பேணிக்காக்கப்பட வேண்டியது அவசியம்... நேற்று இன்று நாளை என பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இளம் பெண்களும் தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. ஒவ்வொரு இளைஞனும் சக இளம் பெண்களை சகோதரிகளாக பாவித்துப் பழக வேண்டியது அவசியம்..நல்ல ஒழுக்கத்தைக் கற்றுத்தர வில்லை இன்றைய கல்வி நிலையங்கள்..பெற்றோர்களும் பிள்ளைகளை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தீதும் நன்றும் பிறர் தர வாரா...இது மாதிரியான கொடுமைகள் இனி நடக்காமல் இருக்கட்டும்..தவிரவும் சட்டங்களும் நீதியும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய அவசியமும் நேர்ந்துள்ளது.இதுவே தருணமாக அமையட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sankar - Singapore.  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201210:33:11 IST Report Abuse
Sankar change the Indian political and make a new law.
Rate this:
Share this comment
Cancel
predeep - Madurai  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201210:16:30 IST Report Abuse
predeep plzz....giv them very big punishment..this shld not happn ever never in world hereafter...god bless her soul...
Rate this:
Share this comment
augustin - tuticorin,இந்தியா
30-டிச-201211:38:35 IST Report Abuse
augustinமாணவியின் ஆச‌ை படி சட்டத்தி்ன் முன் நிறுத்தி ஆறு நாய்களை நடுரோட்டில் தூக்கில் தொங்க விட வேண்டும் அப்போது தான் டெல்லி மாணவி அமானத் ஆத்மா சாந்தி அடையும் ...
Rate this:
Share this comment
Cancel
ValliRaam - chennai,இந்தியா
30-டிச-201210:06:32 IST Report Abuse
ValliRaam மனம் வலிக்கும் சம்பவம் இது. அவள் ஆத்மா சாந்தி அடைய வேண்டோம் என்றால் இந்த செயலை செய்த மிருகங்களை துன்புறுத்தி கொள்ள வேண்டும். மதுபான கடைகளை இந்திய முழுவதும் தடைசெய்ய வேண்டும். yes
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X