சத்திரப்பட்டி : ""குழுமம் அமைத்து, 85 சதவீத மானியத்துடன் பேண்டேஜ் தொழிலை விரிவுபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாணிக்கம் தாகூர் எம்.பி.,கூறினார்.
சத்திரப்பட்டியில் நடந்த, மேல்நிலை குடிநீர் தொட்டி அடிக்கல் நாட்டுவிழாவில், அவர் பேசுகையில், ""சத்திரப்பட்டியில் உள்ள நெசவாளர் சங்கத்திற்கு, கைத்தறிதுறை மூலம் வரவேண்டிய தள்ளுபடி ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், பெண்கள் கழிப்பறை வசதிக்காக, வரும் ஆண்டிலும் நிதி ஒதுக்குவேன்.
மத்திய அரசின் குழுமம் அமைத்து, 85 சதவீத மானியத்துடன் பேண்டேஜ் தொழிலை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். மூன்று ஊர் சாலியர் மகாஜன சங்க தலைவர் ஞானகுரு தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் ராஜேந்திர மணி, ராமசாமி முன்னிலை வகித்தனர். மேலராஜகுலராமன் ஊராட்சி துணைத்தலைவர் முத்து குருபாக்கியம் அறிக்கை வாசித்தார். சத்திரப்பட்டி ஊராட்சி தலைவர் பழனி முருகன் நன்றி கூறினார்.