பொது செய்தி

தமிழ்நாடு

தோனியின் சதம் வீணானது : சென்னை ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் ‌வெற்றி

Updated : டிச 30, 2012 | Added : டிச 30, 2012 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி சதம் அடித்த வீணானது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. ஆட்டம் துவங்கிய 10 ஓவருக்குள் 5 விக்கெட் விழுந்தது. இதன் பின்னர்
1st ODI: Pakistan beat India by six wickets சென்னை ஒரு நாள் போட்டியில் இந்தியா திணறல் ; பாகிஸ்தான் வீரர்கள் பந்து வீச்சில் பலர் போல்டு

சென்னை: சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கேப்டன் தோனி சதம் அடித்த வீணானது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் களம் இறங்கிய இந்திய அணி பாகிஸ்தான் பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. ஆட்டம் துவங்கிய 10 ஓவருக்குள் 5 விக்கெட் விழுந்தது. இதன் பின்னர் களம் இறங்கிய தோனியும், ரெய்னாவும்ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து ஓரளவு மீட்டனர். ஆட்ட நேர முடிவில் ( 50 ஓவர் ) ல் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 228 நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்‌ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் விக்கெட்டை வீழத்திட முடியாமல் இந்தியா பந்து வீச்சிலும் திணறி வருகிறது. 40 ஓவர்கள் கடந்தும் பாகிஸ்தான் அணியில் 4 விக்கெட் மட்டுமே வீழ்த்தப்பட்டது. இதனால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது. கடும் போராட்டம் இந்தியாவுக்கு பலன் அளிக்கவில்லை. 48 ஓவரில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ்வென்றது பாக்., அணி :

இரண்டு நாட்களாக சென்னையில் பெய்துவரும் மழை காரணமாக, மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. இதனால் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. "டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா, "பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சேவக் (4), காம்பிர் (8) ஏமாற்றினர். அடுத்து வந்த விராத் கோஹ்லி (0), யுவராஜ் சிங் (2), ரோகித் சர்மா (4) சேவக் ( ( 4) , அஸ்வின் ( 31 ), ரன்கள் ‌எடுத்தனனர். யாரும் நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரெய்னா (43) ஆறுதல் தந்தார். தோனி (113) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சார்பில் ஜுனைய்டு கான் 4 விக்கெட்டுகளையும், முகமது இர்பான், முகமது ஹபீஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.


முதல் ஓவரே வீணானது:
துவக்க வீரர்களாக கவுதம் காம்பீரும், சேவக்கும் களமிறங்கினர். முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3.5வது ஓவரில் இந்தியா 17 ரன்கள் எடுத்திருந்த போது, ஜூனாயிட் கான் பந்தில் 4 ரன்களில் சேவக் போல்டானார். 4.4 வது ஓவரில் முகமது இர்பான் பந்தில் காம்பீர் 8 ரன்கள் எடுத்திருந்த போது போல்டானார். அடுத்து வந்த விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமல் ஜூனாயிட் கான் பந்தில் போல்டாகி வெளியேறினார். அப்போது இந்தியா எடுத்திருந்த ரன்கள் 19/3. யுவராஜ் சிங்கும் இந்தியா 20 ரன்கள் எடுத்திருந்த போது , 4வது விக்கெட்டாக 6வது ஓவரில் 2 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜூனாயிட் கான்பந்தில் போல்டாகி வெளியேறினார். 9.4வது ஓவரில் இந்தியா 4 விக்கட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்த போது, ரோகித் சர்மாவும் 4 ரன்னில் ஜூனாயிட் கான் பந்தில் ஹபீசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறியதால், இந்திய அணி ரன்களை சேர்க்க திணறியது. பாகிஸ்தான் களம் இறங்கும்போது இந்திய வீரர்களின் பந்து வீச்சை பொறுத்தே வெற்றி நிர்ணயிக்கப்படும்.


பாக்., வீரர்கள் எடுத்த ரன் விவரம்:
பாக் அணியில் முகம்மது ஹபீஸ் ( 0 ) , நசீர் ஜாம்ஜெட் ( 101 ) யூனிஸ்கான் ( 58 ) , மிசாப்உல்ஹக்( 16 ), சோயப்மாலிக் (17 ) ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர்கள் குமார் 2 விக்கெட்டுகளும், டிண்டா இசாந்த்சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தோனி சாதனை:
இன்றயை போட்டியில் ஆட்ட நேர இறுதியி்ல் ( 48 வது ஓவர் ) சதம் அடித்தார். இது ஒருநாள் போட்டியில் இன்றுடன் 7 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்தது. ஏற்கனவே முடிந்த 2 டுவென்டி 20 போட்டியில் தலா ஒரு வெற்றியை இரு அணியினரும் கைப்பற்றினர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
31-டிச-201210:19:47 IST Report Abuse
ஆனந்த் எப்படி வேஸ்ட் ஆகும்.. அவருக்கு வர வேண்டிய பல லக்ஷம் சம்பளமாக வந்து இருக்குமே.. ரெம்ப கவலை படாதீங்க
Rate this:
Cancel
rad - chennai  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201205:39:59 IST Report Abuse
rad avanukku cricket aadave theriyadhu nu evanukkume theriyala .....
Rate this:
Cancel
Rayar Ayyappan - vriddhachalam  ( Posted via: Dinamalar Windows App )
31-டிச-201202:29:11 IST Report Abuse
Rayar Ayyappan தோனி நல்ல கேப்டனே என்பதற்கு இதுவே நல்ல சான்று இனியாவது தோனி மற்றும் மோடி இவர்களே இந்தியாவின் பெருமைகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X