பதிவு செய்த நாள் :
கருத்துகள் (84)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:டில்லியில், மருத்துவ மாணவி ஆறு பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்டு, மரணம் அடைந்ததை அடுத்து, இதுபோன்ற குற்றங்கள் இனிமேல் நிகழ்ந்தால், அதிரடி தண்டனை தரும் வகையில், சட்டங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளில், மத்திய அரசு சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது. இதன்மூலம், டில்லி அவமான சம்பவத்தில் இருந்து மீள முயற்சி மேற்கொண்டுள்ளது.

டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி, வெறிக் கும்பலால், கற்பழிக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. "கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு, கடுமையான தண்டனை வழங்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும், ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி, ஜே.எஸ்.வர்மா தலைமையில் குழுவை, மத்திய அரசு ஏற்கனவே அமைத்துள்ளது. இதற்கிடையே, பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா, ஆகியோரின் வீடுகளுக்கு முன், பெண்கள் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், மாணவர்களும், சமீபத்தில், முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்துப் பேசிய, சோனியா, "கற்பழிப்பு குற்றவாளி களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான, அனைத்து முயற்சிகளும், மத்திய அரசு சார்பில் எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார்.இது தொடர்பாக, காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தை கூட்டியும், சோனியா ஆலோசனை நடத்தினார். இதில் பேசிய, காங்., செய்தி தொடர்பாளர் ரேணுகாசவுத்ரி உள்ளிட்டோர், "ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போல், நம் நாட்டிலும், கற்பழிப்பு குற்றங்களில்

ஈடுபடுவோருக்கு, ரசாயன காயடிப்பு தண்டனை வழங்கலாம்' என்ற, யோசனையை முன் வைத்தனர்.

இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: கற்பழிப்பு குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, புதிய சட்ட வரைவு, காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், கற்பழிப்பு குற்றச் சாட்டுகளில், குற்றங்கள் நிரூபிக்கப்படுவோருக்கு, ஐரோப்பிய நாடுகளில் உள்ளதைப் போன்ற, ரசாயன காயடிப்பு முறை மற்றும் 30 ஆண்டு சிறை தண்டனை வழங்க வேண்டும்.

கற்பழிப்பு தொடர்பான வழக்குகளை, விரைவு கோர்ட்டுகள் மூலம் விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட, பல விதிமுறைகள் சேர்க்கப் பட்டுள்ளன.மேலும், சிறார்களுக்கான வயது வரம்பை குறைக்கவும், 15 வயதுக்கு உட்பட்டோரை மட்டும்,சிறார் சட்ட வரம்புக்குள் வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணா திராத் தலைமையிலான, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்ச கமும்

Advertisement

, இதுகுறித்து, பல்வேறு தரப்பினரிடமும், கருத்துக்கள் கேட்டு, ஒரு முடிவுக்கு வந்துள் ளது. இதன்படி, ரசாயன காயடிப்பு உள்ளிட்ட விஷயங்களை, சட்ட வரைவாக தயாரித்து, அதை, நீதிபதி வர்மா தலைமையிலான குழுவிடம் அளிக்கவும், திட்டமிடப் பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில், சட்ட திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (84)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
31-டிச-201219:34:05 IST Report Abuse
தமிழ் குடிமகன் கள்ள சாராயத்தை குடித்து மக்கள் சாகிறார்கள் என்று மது கடைகளை திறக்கும் அரசு ,அதே நடைமுறையை இதற்கும் பயன்படுத்தலாம் ,அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும் ,அரசு அதைதானே விரும்புகிறது .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
31-டிச-201219:30:46 IST Report Abuse
தமிழ் குடிமகன் இது போல் நடப்பதை தடுக்க நகரம்தோறும் சிவப்பு விளக்கு பகுதியை தொடங்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
31-டிச-201219:25:00 IST Report Abuse
தமிழ் குடிமகன் இவர்கள் இதை செய்ய மாட்டார்கள் ஏன் என்றால் நாளை அரசியல்வாதிகளே இதில்மாட்டிக்கொள்ளலாம்,தமிழ்நாட்டிலேயே இது போல் ஒரு சம்பவம் நடந்துள்ளதே .
Rate this:
Share this comment
Cancel
தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி
31-டிச-201219:22:36 IST Report Abuse
தமிழ் குடிமகன் ivarkal
Rate this:
Share this comment
Cancel
kumargvm - bangalore,இந்தியா
31-டிச-201219:01:18 IST Report Abuse
kumargvm இதே மாதிரியான சம்பவம் துத்துக்குடிஇலும் நடந்தது...யாரும் கண்டுகொள்ளவில்லை....ஏன்?
Rate this:
Share this comment
Cancel
c.nagarajan - chennai,இந்தியா
31-டிச-201218:40:52 IST Report Abuse
c.nagarajan இதுபோன்ற கொடுரத்திற்கு காரணம் இன்றைய கல்வி அறிவு மற்றும் உணவு முறையுமோ ஆகும். அந்தக் காலத்தில் கல்வி முறையில் படிப்போடு சேர்த்து நீதி நெறிக்கதைகள், மனிதன் செய்யக்கூடாதவற்றை வகுத்து பாவம், புண்ணியம் என்று பிரித்து வைத்து அதை மக்களுக்கு வேதம் முலம் போதித்தனர். ஆனால் பகுத்தறிவு என்று கூறி இந்தியாவில் இருந்த நல்ல விஷயங்களை எல்லாம் மறைத்துவிட்டனர். அதே போல் மனிதர்கள் சாப்பிடும் சாப்பாட்டையும் இயற்கையோடு ஒன்றியதாக இருந்தது. அதனால் அவன் ஆரோக்கியமாக இருந்தான் மேலும் விரத முறைகள் மனிதனை மேலும் கட்டுப்படுத்தியது. ஆனால் அதையெல்லாம் கேலி செய்து, இன்று பாஸ்ட் புட் உணவு போன்ற அதிவேக உணவு முறைகள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும பல்வேறு வகை உணவுகள் வந்துவிட்டது. இதனால் மனிதனுக்கு உணர்ச்சியின் வேகம் கூடுவதும், வன்முறையான எண்ணங்கள் உருவாகின்றது. இதனால் அவன் இதுபோன்ற வன்முறையான பல விஷயங்களை செய்துவிடுகிறான். எனவே இனிமேலாவது நம் முன்னோர் வகுத்த நீதிக் கதையையும், உணவு முறையையும் அலட்சியம் செய்யாமல் பின்பற்றினால் இனிவரும் சந்ததியினர் அறிவாளிகளாகவும், தெளிவானவர்களாகவும் இருப்பார்.
Rate this:
Share this comment
Cancel
Ambedkumar - Chennai,இந்தியா
31-டிச-201218:19:58 IST Report Abuse
Ambedkumar நம் நாட்டில் prostitution ஐ அங்கீகரித்து முறைபாடுதுவ்தன் மூலமும் பாலியல் குற்றங்களை ஓரளவு தடுக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam Rajangam - MADURAI,இந்தியா
31-டிச-201217:03:14 IST Report Abuse
Balasubramaniam Rajangam இந்த சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகளை அலைக்களிப்பதை தடுக்க வேண்டும். வேண்டுமென்றே மிரட்டுவதற்கு பெண்கள் இதை பயன்படுத்தினால் அவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இவர்களுக்கு பரிந்து பேச பெண் உரிமை பேசுபவர்கள் முன்வரக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam Rajangam - MADURAI,இந்தியா
31-டிச-201216:31:07 IST Report Abuse
Balasubramaniam Rajangam While we condole this dastardly act we often forget or ignore the situation in which these heinous acts are being done. 1.The time of crime (beter to avoid late night adventure otherwise get proper protection) 2.Place of crime (better to avoid secluded places in the vee hours) 3.Victims occupation (eg., IT professionals are to be accompanied with protection) 4.Family backround like only mother/father taking care of the girl child. (the morale behaviour/character of parent also plays vital role) 5.Lack of awareness to sense the environment prevailing around to avoid such untoward activities 6.Weaker section of women/girls are easily lurred by the culprits in the name of love or using their infatuation. (cinemas and much hyped love affairs in electronic media TV/FM Radio play a major role in implanting the dangerous adventure to entangled a premature love affair leading to sexual assault on girls) 7.We deny to accept in the name of women’s right that dress code cannot be a reason for such crime. But I strongly believe that in the eye of an adult man a women wearing dress that exposes her curves and hips can further add fuel to one’s sexual desire. It is always safe to have restrictions what to wear and what not to. 8.It is paramount for a parent to watch their wards carefully and educate them to keep away from risky situations. 9.It is senseless to argue that only man should behave inspite of provoking young guys with lustrous dresses. ALWAYS PREVENTION IS BETTER THAN CURE.
Rate this:
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
31-டிச-201215:40:31 IST Report Abuse
M.P.MADASAMY பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் கடுமையான சட்டங்களையும் போட்டுவிட்டு கண்முன் நடக்கும் கலாச்சார சீரழிவை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது.கல்வித்திட்டம் கலாச்சார அமைப்புகளில் மாற்றத்தைக்கொண்டுவர வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X