தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெறுவதில், தொடர்ந்து தடைக்கற்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் உரிமை காக்க, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன், முதல்வர் ஜெயலலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
காவிரி விவகாரத்தில், மத்திய அரசு மவுனமாக இருந்து வருகிறது. இந்த போக்கை கைவிட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, உடனே அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தமிழக விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, உடனே மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம், 22ம் தேதி, மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.
ஆலோசனை:
இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில், காவிரி மற்றும் பரம்பிகுளம் - ஆழியார் நதி நீர் குறித்து, அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன், முதல்வர் ஜெயலலிதா முக்கிய ஆலோசனை நடத்தினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, பொதுப்பணித்துறை அமைச்Œர் ராமலிங்கம், தலைமை செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, அர” தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் முன் அளித்த வாக்குறுதியின் படி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, இதுவரை அரசிதழில் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருவது; காவிரி பிரச்னையில், அடுத்த கட்டமாக, மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவது குறித்து, விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக, தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு பதில்:
காவிரி விவகாரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கருத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா நேற்று முன் தினம் பதிலளித்தார்.அதில், "அ.தி.மு.க., ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதை, தி.மு.க., தடுத்து வருகிறது' என, குற்றஞ்சாட்டினார்.
காவிரி விவகாரத்தில் அடுத்தடுத்து ஏற்படும் தடைக்கற்களை தாண்டி, தமிழகத்தின்உரிமையை நிலை நாட்டுவது குறித்து, முதல்வரின் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெறவுள்ள, 20வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஏற்பாடுகள், தமிழக மின் நிலைமை மற்றும் தமிழக அரசு கேபிள், "டிவி' நிறுவனத்திற்கு, டிஜிட்டல் ஒளிபரப்பு பெறுவது ஆகியவை குறித்தும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர் ஜெயலலிதா விரிவாக பேசினார்.
பொதுக்குழு கூட்டம்:
அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னை வானகரத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கிறது.முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் பொதுக்குழுவில், தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக, மத்திய அரசு மற்றும் எதிர்கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு, முக்கிய தீர்மானங்கள் வரலாம் என்ற கருத்து உள்ளது.
காவிரி நீர், முல்லை பெரியாறு மற்றும் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் மற்றும் நிரந்தர மின் வழித்தடங்கள், சமையல் காஸ், அரிசி, உரம் ஆகியவற்றில், தமிழக மக்களின் நலனுக்கு எதிராக, தொடர்ந்து மத்திய அரசும், தி.மு.க.,வும் முட்டுக்கட்டையாக இருப்பதை எதிர்கொள்வது பற்றி, கட்சி மேலிடம் முடிவு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
கொடநாடு பயணம்:
முதல்வர் ஜெயலலிதா, நாளை சென்னையில் இருந்து, நீலகிரிக்கு செல்கிறார். நீலகிரி, எடக்காடு மட்டத்தில், ஜன., 4ம் @ததி, குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் பொன் விழாவில், பங்கேற்கும் முதல்வர், விழா மலரை வெளியிடுகிறார். மேலும், கூட்டுறவு சிறு தேயிலை உற்பத்தியாளர் சம்மேளனத்தின், புதிய, 250 கிராம் எடையுள்ள, "ஊட்டி டீ' விற்பனை மற்றும் ஆவின் விற்பனையகங்களில், ஊட்டி டீ விற்பனையையும், துவக்கி வைக்கிறார்.இதையடுத்து, நீலகிரி, கொடநாட்டில் சில நாட்கள் தங்கி, அங்கிருந்தபடியே, அரசு பணிகளை மேற்கொள்வார் என, அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் குழு -