அரசியல் செய்தி

தமிழ்நாடு

அழகிரியுடன் கருணாநிதி நடத்தும் நிழல் யுத்தம் நாடகமா? தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்

Added : ஜன 12, 2013 | கருத்துகள் (53)
Share
Advertisement
தனக்கு பின், தி.மு.க.,வின் அடுத்த தலைவராக, ஸ்டாலினை பதவி ஏற்க வைக்க, எதிர்காலத்தில் கட்சியில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, "மாநிலத்துக்கு ஸ்டாலின்; டில்லி அரசியலுக்கு கனிமொழி' என்ற, "ஆபரேஷனை' தி.மு.க., தலைவர் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் என்று தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.அதேசமயம், தனது மூத்த மகனும், மத்திய அமைச்சருமான அழகிரியிடம் நிழல்
 அழகிரியுடன் கருணாநிதி நடத்தும் நிழல் யுத்தம் நாடகமா? தி.மு.க., தொண்டர்கள் குழப்பம்,Is War between Karunanidhi and Alagiri is Drama?

தனக்கு பின், தி.மு.க.,வின் அடுத்த தலைவராக, ஸ்டாலினை பதவி ஏற்க வைக்க, எதிர்காலத்தில் கட்சியில் எந்த குழப்பமும் ஏற்படக் கூடாது என்பதற்காக, "மாநிலத்துக்கு ஸ்டாலின்; டில்லி அரசியலுக்கு கனிமொழி' என்ற, "ஆபரேஷனை' தி.மு.க., தலைவர் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் என்று தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

அதேசமயம், தனது மூத்த மகனும், மத்திய அமைச்சருமான அழகிரியிடம் நிழல் யுத்தத்தை, கருணாநிதி நடத்துவது நிஜமா அல்லது நாடகமா என்ற குழப்பம் தி.மு.க., தொண்டர்களிடம் எழுந்துள்ளது."தனது ஆயுள் முழுவதும், இந்த தமிழ் சமுதாயத்திற்கு உழைப்பேன்; எனக்கு பின் ஸ்டாலின் பாடுபடுவார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேச்சுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் அழகிரி, "தி.மு.க., சங்கர மடம் அல்ல; கட்சி பதவியை பொதுக்குழு கூடி முடிவு செய்யும்' என, ஆவேசமாக தெரிவித்தார்.

தி.மு.க., மாவட்டச்செயலர்கள் கூட்டம் முடிந்த பின், "கட்சியின் தலைவர் பதவிக்கு ஸ்டாலின் போட்டியிட்டால், அதை நான் முன்மொழிவேன்' என, கருணாநிதி அதிரடியாக, பதிலடி கொடுத்தார். கருணாநிதியின் இந்த திட்டவட்டமான முடிவால், அழகிரி கடும் அதிருப்தி அடைந்தார். தனது தந்தையை நேரில் சந்தித்து பேச வேண்டும் என, பகீரத முயற்சியை அழகிரி மேற்கொண்டார். ஆனால், அழகிரியை சந்திப்பதை கருணாநிதி தவிர்த்தார். இதனால், அழகிரி மீது கருணாநிதியின் கோபம் இன்னும் தணியவில்லையா என்ற கேள்வி; தி.மு.க.,வினர் மத்தியில் எழுந்துள்ளது.தனக்கு பின் ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பதில், கட்சியினர் மத்தியில் எந்த எதிர்ப்பும், குழப்பமும் ஏற்படாமல் இருப்பதற்காக, அழகிரி மீது, நிழல் யுத்தத்தை, கருணாநிதி நடத்துகிறாரா என்ற குழப்பமும் தொண்டர்கள்
மத்தியல் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தன் ஆயுள் இருக்கும் வரை, தலைவர் பதவியை, கருணாநிதி விட்டுக் கொடுக்க மாட்டார். தனக்கு பின், கட்சித் தலைமையை ஸ்டாலினும், டில்லிக்கு கனிமொழியும், தென் மண்டலத்திற்கு அழகிரியும் பணியாற்ற வேண்டும் என்பது தான், கருணாநிதியின் விருப்பம்.ஸ்டாலினிடம், 70 சதவீத மாவட்டச் செயலர்கள் இருந்தால், மீதமுள்ள 30 சதவீதம் மாவட்டச்செயலர்கள் அழகிரி, கனிமொழிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆக மொத்தம், 100 சதவீதம் கட்சியினரின் ஆதரவு, தனது மூன்று வாரிசுகளுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் கருணாநிதி கவனமாகவும், சாமர்த்தியமாகவும் காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால், ஆட்சி அதிகாரம் இருந்தால் மட்டும், அழகிரி தீவிர அரசியிலில் ஈடுபடுகிறார் என்பதால், அவரது செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த கருணாநிதி, அவரை தென் மண்டல அரசியலை மட்டுமே பார்க்கட்டும் என, ஒதுக்கி வைக்க முடிவு öŒ#துள்ளார்.அதனால் தான், அழகிரியை சந்திக்க அனுமதிக்காமல், அவர் மனம் மாறி, தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என, கருணாநிதி விரும்புகிறார். ஸ்டாலின் அடுத்த தலைவராக பதவி ஏற்க வைப்பதற்கு தான், மாநில அளவில் ஸ்டாலின், மத்தியில் கனிமொழி என்ற, "ஆபரேஷனை' வெற்றிகரமாக, கருணாநிதி நடத்தி முடித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். -நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
17-ஜன-201312:54:23 IST Report Abuse
MOHAMED GANI மற்ற எல்லா தொழில்களிலும் வாரிசுகள் ஈடுபபடுவது போலத்தான் அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். கருணாநிதியின் மகன், மகள் என்பதாலேயே அரசியலில் ஈடுபடக்கூடாது என்பது இல்லை. அவர்களும் நீண்ட நாட்கள் அரசியல் அனுபவம் பெற்று அதன்பின்தான் பதவிகளைப் பெறுகிறார்கள். அவர்கள் அரசியலில் ஈடுபட்டு தவறுகள் செய்தால் கேட்கலாமே ஒழிய, அரசியலில் ஈடுபட்டு பதவிகளைப் பெறுவதையே குறை சொல்வது ஒருதலைபட்சமானதாகும்.
Rate this:
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜன-201319:53:02 IST Report Abuse
Nallavan Nallavan வேறு யாரும் தமைமைப் பதவிக்காகப் போட்டிக்கு வந்துவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு என்று பலருக்கும் தெரியும். திமுகவின் தொண்டர்கள் இது தெரியாதது போல நடிப்பார்கள்.
Rate this:
vijay0301 - chennai,இந்தியா
13-ஜன-201323:49:48 IST Report Abuse
vijay0301மிக சரியான உண்மை...
Rate this:
Cancel
R.Manohar - Trichy,இந்தியா
13-ஜன-201315:29:41 IST Report Abuse
R.Manohar ஸ்டாலின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் எதிரானவர்களை, குறிப்பாக மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காமல் போய் புழுங்கி கொண்டு இருக்கும் வீரபாண்டியார் குடும்பத்து வாரிசுகள் போலிருக்கும் திமுகவினரை அழைத்து மதுரையில் அழகிரி ஒரே ஒரு ரகசிய கூட்டம் போட்டால் போதும். கருணாநிதி அரண்டு போய் விடுவார். அப்புறம் போடுவார் பாருங்க சூப்பர் பல்டி. தமிழகத்துக்கு தனது தலைமகன்தான் தலைமைக்கு தகுதியானவன் என்று. மறுநாளே அல்லக்கை வீரமணியிடமிருந்து பாராட்டு பத்திரம் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X