பதிவு செய்த நாள் :
கருத்துகள் (107)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை: பொங்கல் பரிசாக, அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுக்கக் கோரி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கோவை மக்கள், திருப்பி அனுப்பினர். இந்த மக்களின் பெருந்தன்மையான குணம், தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; 11 விவசாயிகள், தற்கொலை முடிவை தேடிக் கொண்டனர்.இதையடுத்து, "விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு மூலம், ஏக்கருக்கு, 13,692 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெ., அறிவித்தார்.எனினும், பாதிப்பு அதிகம் என்பதால், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; விவசாய கூலிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வழங்க கோரி, டெல்டா மாவட்டங்களில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம், பிள்ளையார்புரத்தில் வசிக்கும், 600 குடும்பத்தார்,

அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை பெற்று, அதைஅரசுக்கு திருப்பி அனுப்ப முடிவுசெய்தனர்.

"தற்கொலையை தடுத்து நிறுத்துக':
அதன்படி, சீனிவாசா நகரில் உள்ள தபால் அலுவலகத்தில், நேற்று இத்தொகையை, "மணியார்டர்' செய்தனர். அதில், "டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்குக; தற்கொலையை தடுத்து நிறுத்துக' என்ற வாசகத்தையும் எழுதி அனுப்பினர்.நூறு ரூபாயை திருப்பி அனுப்பிய அனைவரும், வசதி படைத்தவர்கள் அல்ல; அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் தினக் கூலிகள் தான். நஷ்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்த்து, தாங்கள் பெற்ற பணத்தை, அவர்களுக்காக அனுப்பி வைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

"சோறு போடுபவர்கள் சோகமாகலாமா?
'அருண்குமார் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக,பொருட்களை அரசு வழங்குவது, மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், நமக்கு சோறு போட

Advertisement

பாடுபடும் விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்பட்டு, சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு செய்யும் சிறு உதவியாக, இத்தொகையை திருப்பி அனுப்பியுள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ளவர்கள், விவசாயிகளின் நலனுக்காக, பொங்கல் பரிசு தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, மூல காரணமாக விளங்கும் விவசாயிகளின் நலனுக்காக, கோவை மக்கள் செய்துள்ள நற்பணி, அனைவரையும், "சபாஷ்' போட வைக்கிறது!

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (107)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan jayagopal - chennai,இந்தியா
13-ஜன-201321:41:49 IST Report Abuse
mohan jayagopal கோவை மக்கள் பாராட்ட பட வேண்டியவர்கள். சபாஷ். வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Purushothaman Mani - Kuala Lumpur,மலேஷியா
13-ஜன-201317:04:26 IST Report Abuse
Purushothaman Mani மிக மிக பெருந்தன்மையான விடயம்.. போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியது... வாழ்க மனிதம்.
Rate this:
Share this comment
Cancel
Sriram - chennai,இந்தியா
13-ஜன-201316:52:54 IST Report Abuse
Sriram கோவை மக்களை வாழ்த்த வயதில்லை எனக்கு, மேலும் வார்த்தையும் இல்லை.... விவசாய மக்களை நினைத்துப் பார்த்து செய்த இந்த செயலுக்கு நான் தலை வணங்குகிறேன், இதனை எழுதிய எனக்கு இது தோணவில்லை மேலும் இன்னும் என்ன செய்யவேண்டும் என்று புரியாமல் நிற்கிறேன் என்று சொல்லும்போது வெக்கமாகத்தான் இருக்கிறது.....
Rate this:
Share this comment
Cancel
Varadharajan Karuppannan - Bangalore,இந்தியா
13-ஜன-201316:19:49 IST Report Abuse
Varadharajan Karuppannan நானும் எனது பங்கை அவர்களுக்காக செய்ய கடமை பட்ட்ருகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
13-ஜன-201315:52:17 IST Report Abuse
Varatharajan சரியான ஒரு திருப்பு முனை சரியான ஒரு சாட்டை அடி பெருந்திரளானா மக்களின் எண்ணம் வெளிப்பட்டு உள்ளது இப்ப தேவை நீர் விவசாயத்திற்கு ""அந்த நீர் ஒரு சொட்டு இருந்தால் கூட இறக்கும் மனிதன் வறண்ட நாவில் விழுந்தால் அவன் உயிர் பிழைப்பான்"" என்பது முது மொழி அப்படி ஒரு சொட்டு தண்ணீர் விட்டு தமிழ் நாட்டு மக்களை அல்ல, இந்திய மக்களை அல்ல உலக மக்களையே திரும்பி பார்க்கும் அளவிற்கு செய்த கோவை வாழ் மக்கள் செய்த சேவை வர வேற்க தக்க செயல் அன்பு பொங்கல் இனிய பரிசு, இனிக்கும் பரிசு, சுவைக்கும் பரிசு இது
Rate this:
Share this comment
Cancel
Ramanathan Subramanian - chennai,இந்தியா
13-ஜன-201315:45:28 IST Report Abuse
Ramanathan Subramanian "அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் பிறத்தல் அரிது, "கூன்,குருடு,செவிடு,ஊமை" இல்லாமல் என்பது பழ மொழி"- இதனினும் அரிது இவர் போன்ற வாழ்வாங்கு வாழும் மானிடராய் பிறத்தல்......
Rate this:
Share this comment
Cancel
M.P.MADASAMY - Trivandrum,இந்தியா
13-ஜன-201315:35:20 IST Report Abuse
M.P.MADASAMY அப்படியே அந்த மிக்சி,கிரைண்டர்,வேட்டிசேலை,டிவி எல்லாத்தையும் வெளியில எடுத்து வச்சி வேண்டாம்னு போஸ் கொடுங்க பார்ப்போம் .நல்ல புள்ளைங்களாச்சே.
Rate this:
Share this comment
Cancel
Giri - nagercoil,இந்தியா
13-ஜன-201315:09:29 IST Report Abuse
Giri பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Giri - nagercoil,இந்தியா
13-ஜன-201315:03:57 IST Report Abuse
Giri வரவேற்போம்
Rate this:
Share this comment
Cancel
திருமகள்கேள்வன் - chennai,இந்தியா
13-ஜன-201314:57:29 IST Report Abuse
திருமகள்கேள்வன் அரசு நிவாரணம் தரவில்லை... பரிசு கொடுத்திருக்கிறது... இது இநாமோ, பிச்சையோ அல்ல... அவ்வாறு நினைப்பது நம் தவறு... நம்மை நாமே தாழ்த்திக்கொள்வது போல் ஆகும்... அரசின் பரிசை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அவர் அவர் விருப்பம்....ஏதோ ஒரு இடத்தில் சிலர் ஏற்கவில்லை என்பதனால் இனி யாரும் ஏற்க கூடாது என்று நினைப்பது சிறு பிள்ளை தனம்... ஒருவர் நமக்கு நம் நலம் விரும்பி ஒரு பரிசினை அன்புடன் அளிக்கும் போது அதனை பெருந்தன்மையுடன் ஏற்று அவரையும் சிறப்பித்து நம்மையும் உயர்த்திக்கொள்ளவேண்டும்... நாமாக கேட்டு பெற்றால்தான் பிச்சை, இனாம் எல்லாம்... அரசே விரும்பி தருகிறது... அதனை நாம் பெருந்தன்மையோடு ஏற்று நம்மையும் உயர்த்தி, பரிசளித்த அரசையும் சிறப்பிக்க வேண்டும்... நீங்கள் பெற்ற பரிசை வறியவர் எவருக்கேனும் கொடுத்துவிடுங்கள்... உங்கள் பகுதியில் உள்ள அனைவரும் அந்த பணத்தை ஏதாவது அனாதை இல்லங்களுக்கு உங்கள் கைகளாலேயே அன்பளிப்பாக கொடுத்துவிடுங்கள்... அதை விட்டுவிட்டு இதனை பற்றி அர்த்தமில்லாமல் பேசுவதால் என்ன லாபம்... ஒன்று செய்யலாம், அரசினால் விவசாயிகள் வறட்சி நிவாரண பணி கணக்கென ஒரு கணக்கினை தொடங்க சொல்லலாம்... பிறகு அந்த கணக்கிற்கு நம்மாலான நிதி உதவி செய்யலாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X