டீசலுக்கு மாறிய டீக்கடைகள்

Added : ஜன 18, 2013
Advertisement
பாகனேரி:சிறியளவில் நடத்தப்படும் டீக்கடைகளில் கரி அடுப்புகள் பயன்படுத்தப்பட்டது.கரி அடுப்புகள் வேகமாக சூடு ஏறாது என்பதால் காலப்போக்கில் காஸ்,மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறினர்.கடந்த காலங்களில் ரேஷனிலும்,வெளி மார்க்கெட்டிலும் மண்ணெண்ணெய் எளிதாக கிடைத்தது.தற்பொழுது மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதே விலையில் கிடைக்கும் டீசலை பயன்படுத்த

பாகனேரி:சிறியளவில் நடத்தப்படும் டீக்கடைகளில் கரி அடுப்புகள் பயன்படுத்தப்பட்டது.கரி அடுப்புகள் வேகமாக சூடு ஏறாது என்பதால் காலப்போக்கில் காஸ்,மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கு மாறினர்.கடந்த காலங்களில் ரேஷனிலும்,வெளி மார்க்கெட்டிலும் மண்ணெண்ணெய் எளிதாக கிடைத்தது.தற்பொழுது மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதே விலையில் கிடைக்கும் டீசலை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர்.மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு வெளி மார்க்கெட்டில் 50 ரூபாய் வரை விற்கப்படுவதோடு, அதற்கும் தட்டுப்பாடு நிலவுவதால் அதே விலையில் கிடைக்க கூடிய டீசலை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.டீசலை பயன்படுத்தினால் அடுப்புகளில் உள்ள பர்னர் சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால் டீசலுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X