சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டை சந்திவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கிராமத்தின் சார்பில் பல லட்சம் செலவில் கோயில் திருப்பணி செய்யப்பட்டது.உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் மூன்று நாள்,யாக சாலைப்பூஜை,வேதபாராயணம், திருமுறை பாராயணம் ,தீபாராதனை நடந்தது.நேற்று காலை 9.50 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டது. குன்றக்குடிபொன்னம்பல அடிகள் முன்னிலையில் 10.20 மணிக்கு,கும்பாபிஷேகம், அதைதொடர்ந்து சந்திவிநாயகர், வள்ளி,தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர்,பரிவார மூர்த்திகளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., பெரியகருப்பன், முன்னாள் எம்,எல்,ஏ., க்கள் சண்முகம், அருணகிரி, உமாதேவன், ஒன்றிய தலைவர் வாசு,மாவட்ட கவுன்சிலர் வனிதா, ஒன்றிய கவுன்சிலர் சங்கவை, ஊராட்சி தலைவர் ராசியப்பன்,துணைத்தலைவர் சிவநேசன்.காளாப்பூர் தனசேகரன் பங்கேற்றனர். நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டி மன்றமும்,கலைநிகழ்ச்சிகள்,அன்னதானம் நடந்தன. கிருங்காக்கோட்டை கிராமத்தினர், திருப்பணிக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.