நீராதாரத்தை பெருக்க ஊரணிக்குள் ஊரணி

Added : ஜன 18, 2013 | |
Advertisement
காரைக்குடி:நீராதாரத்தை பெருக்கும் வகையில், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ், ஊரணிக்குள் ஊரணி அமைக்கும் பணியில், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.வரலாறு காணாத வறட்சி இந்த ஆண்டு வாட்டி வதைத்தது. விளைந்து விடும், என்று விதைத்த நெல் மணிகள் சாவியாக மாறி, கால்நடைகளின் வயிற்று பசியை மட்டுமே போக்கின. வானம் பார்த்த பூமிக்கு தற்போது உள்ள ஒரே ஆறுதல், அடித்து வாங்கும்

காரைக்குடி:நீராதாரத்தை பெருக்கும் வகையில், நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ், ஊரணிக்குள் ஊரணி அமைக்கும் பணியில், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன.வரலாறு காணாத வறட்சி இந்த ஆண்டு வாட்டி வதைத்தது. விளைந்து விடும், என்று விதைத்த நெல் மணிகள் சாவியாக மாறி, கால்நடைகளின் வயிற்று பசியை மட்டுமே போக்கின. வானம் பார்த்த பூமிக்கு தற்போது உள்ள ஒரே ஆறுதல், அடித்து வாங்கும் பனிமழை மட்டுமே. பகலவன் வந்தால் அதுவும் பட்டு போய் விடுகிறது. கால்நடையாக நடந்து, மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள், ஊரணி, கண்மாய் தண்ணீரை அருந்தி, தாகத்தை ஈடு செய்யும். தற்போது, அந்த ஊரணி தண்ணீர் பறவைகளின் தாகத்துக்கே ஈடு கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. இனி மழை வர வாய்ப்பில்லாத நிலையில், எதிர்காலத்தில், கால்நடைகளுக்காவது தண்ணீர் சேமிக்க வேண்டும், என்ற எண்ணத்தில், சிவகங்கை மாவட்டத்தில் ஊரணிக்குள் ஊரணி அமைக்க ஆரம்பித்துள்ளன உள்ளாட்சி நிர்வாகங்கள்.
நூறுநாள் வேலை திட்டத்தின் கீழ், ஊரணிக்குள், தண்ணீர் தேங்கும் இடத்தில், கரைகள் அமைத்து, சிறிய ஊரணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. காரைக்குடி அருகே அரியக்குடி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களில், சிறிய அளவிலான ஊரணி அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X