பொது செய்தி

தமிழ்நாடு

பணிநியமன ஆணை வழங்கல்

Updated : பிப் 01, 2013 | Added : ஜன 31, 2013
Share
Advertisement

சூலூரில், நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசின் கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில், சூலூர் ஆர்.வி.எஸ்., கல்லூரியில் மண்டல அளவிலான தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

கோவை, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரிக்கால், மகேந்திரா பம்ஸ், ரூட்ஸ், குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட 38 நிறுவனங்களில் இருந்து வந்த அலுவலர்கள் நேர்முகத்தேர்வு நடத்தி பணியாட்களை தேர்வு செய்தனர்.

சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் பிரகாஷ், 200 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி பேசுகையில்,"கிராமப்புறங்களில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஏராளமான வேலைவாய்ப்புகள் நாட்டில் உள்ளன. தற்போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர். தனியார் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தன்னம்பிக்கை, அங்கீகாரம் கிடைக்கும். கிடைக்கும் வேலையில் உத்வேகத்துடனும், ஆர்வத்துடன் செயல்படவேண்டும். தனியார் துறையில் பணியில் சேர்வதால்,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செய்திருக்கும் பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படாது,''என்றார்.

கல்வி அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் செந்தில்கணேஷ், கோவை மண்டல வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குனர் லதா, மண்டல இயக்குனர்(பயிற்சி) கதிர்வேல், கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சேலம் மாவட்ட உதவி இயக்குனர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X