Definitely leave India if it is repeat | இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவை விட்டு வெளியேறுவேன்: கமல் உறுதி

Updated : ஜன 31, 2013 | Added : ஜன 31, 2013 | கருத்துகள் (7)

மும்பை: மீண்டும் இது போன்ற நிலை ஏற்பட்டால், நிச்சயம் இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என நடிகர் கமல் தெரிவித்தார். விஸ்வரூபம் படம் மும்பையில் நாளை திரையிடப்படவுள்ளது. இதையடுத்து நிருபர்களிடம் பேசிய கமல், நான் பிரச்னையில் இருந்த போது, சினிமா உலகம் மற்றும் எனது ரசிகர்களின் ஆதரவு என்னை நெகிழச் செய்து விட்டது. எனக்கு யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. என்னைப் போல் யாரும் பிரச்னையில் சிக்கக்கூடாது. எனக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. எனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானமாகவே கருதுகிறேன். ஏராளமான முஸ்லிம்கள் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். விஸ்வரூபம் படத்தைப் பார்க்காமலேயே படத்திற்கு எதிராக போராடுகின்றனர். சில தவறான வழி நடத்தல்கள் காரணமாகவே இந்த எதிர்ப்பு வந்துள்ளது. இப்பிரச்னைகள் எல்லாம் படத்தின் விளம்பரத்திற்காக என்று கூறுவது தவறு. நான் எதிர்கொள்ளும் எதிர்ப்பு மதரீதியானது அல்ல. அரசியல் ரீதியானது. இது போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுவேன். பேச்சுவார்த்தைக்குப்பின் எனது படத்தை வெளியிட ஒப்புக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி. இவ்வாறு பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X