தமிழ்நாடு

சுந்தரர் திருமட திருப்பணி வேலைகள்... நெல்லையிலிருந்து கருங்கற்கள் வந்தன

Added : பிப் 06, 2013
Share
Advertisement

திருவெண்ணெய்நல்லூர்:திருநாவலூரில் பிறந்த சுந்தரர் "பித்தாபிறை சூடி' என தேவாரம் பாடினார். இவருக்கு திருநாவலூரில் மடம் நிறுவப்பட்டு காலப்போக்கில் பாழடைந்தது. இந்த மடத்தை தம்பிரான்தோழர் அறக்கட்டளை சார்பில் சீரமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் கி.பி.,7ம் நூற்றாண்டில் பிறந்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர், தேவாரம் பாடிய மூவரில் ஒருவர் என்ற பெருமைக் குரியவர். இவர் பிறந்த இடத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆதிசைவ சிவாச்சாரியார்களால் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு மடம் நிறுவப்பட்டது. கடந்த 1975ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆதிசைவ சிவாச்சாரியார்களும் ஒன்று சேர்ந்து மக்கள் ஒத்துழைப்புடன் திருமடத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்தனர்.
கால போக்கில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் பலர் இடம் பெயர்ந்ததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், மடத்தில் தினசரி நித்ய பூஜைகள் மட்டுமே நடந்தன. மடம் பராமரிப்பின்றி இருந்து வந்தது.
இந்நிலையில் திருநாவலூர் தம்பிரான் தோழர் அறக்கட்டளை சார்பில் மடத்தை திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்திட திட்டமிடப்பட்டது. இதையடுத்து ஆதிசைவ சிவாச்சாரியார்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையே ஊர் பொதுமக்கள் தரப்பில் சுந்தரர் மடம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் பேரில் மடம் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சுந்தரர் மடத்தை கட்டுவதற்கு கடந்த 10.11.2012 அன்று பக்தஜனேஸ்வரர் கோவில் செயல்அலுவலர் முத்துலட்சுமி ஆணை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 25.11.2012ம் தேதி பாழடைந்த சுந்தரர் மடத்தின் கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
பின் திருப்பணி துவக்க விழாவிற்கு தேதி குறிப்பிட்டு, பத்திரிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து கடந்த 23ம்தேதி திருப்பணிகள் துவங்கியது. இதில் கோவில் ஆய்வாளர் சுரேஷ், செயல் அலுவலர் முத்துலட்சுமி கலந்து கொண்டனர்.
அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் மதிப்பில் சுந்தரர் மடத்தை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கருவறைக்காக கருங்கற்கலால் ஆன பேஸ் மட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கோவில் பட்டியிலிருந்து பாலீஷ் செய்யப்பட்ட 60 டன் கருங்கற்கள் வந்து இறங்கியுள்ளன.
சிவனடியார்கள் உதவியுடன் பணிகளை நிறைவு செய்ய இருப்பதாகவும், திருப்பணிகள் நடக்காமல் தடுப்பதற்காக சிலர் விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் இங்குள்ள ஆதிசைவ சிவாச்சாரியார்கள் மூலம் பாலா லயம் செய்யப்பட்ட சுந்தரர் மடத்திலும், பக்தஜனேஸ்வரர் கோவிலிலும் பூஜைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
திருநாவலூரில் பிறந்த சுந்தரரின் பாழடைந்த மடத்தில்
திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X