அலகாபாத் : அலகாபாத்தில் நடைபெற்ற விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரம் குறி்தது உரிய விசாரணை நடத்தப்படும் என்று உ.பி. முதல்வர் அகிலேஷ் கூறியுள்ளார். சம்பவ இடத்தை பார்வையிட்ட முதல்வர் அகிலேஷ், அங்கு பத்திரிகையாளர்களை சந்தி்தார். அப்போது அவர் கூறியதாவது, மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்றுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்த முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.