சம்பால்: அலகாபாத்தில், கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் பலியான விவகாரத்திற்கு, மீடியாக்களே காரணம் என்று , கும்பமேளா குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியவரும், மாநில அமைச்சருமான முகம்மது ஆசம் கான் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பால் பகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் ஆசம் கான் கூறியதாவது, மகாகும்பமேளா நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக சாக்கடையில் விழுந்து 2 பேர் பலியாயினர். மீடியாக்கள் இந்த செய்தியை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தின. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அவ்விடத்திலிருந்து விரைந்து வெளியேற வேண்டும் என்ற நோக்கத்தில் ரயில்வே ஸ்டேசன் பகுதிக்கு விரைந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மாநில நிர்வாகம், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. ஆனால், அளவிற்கதிகமாக ஆட்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மட்டுமே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE