ஸ்ரீநகர் : திகார் சிறையில் சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்குமாறு,அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2001ம் ஆண்டு பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலிற்கு பின்புலமாக செயல்பட்ட பயங்கரவாதி அப்சல் குரு, கடந்த சனிக்கிழமை, திகார் சிறையில் பலத்த பாதுகாப்புடன் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல், பாதுகாப்பு கருதி, திகார் சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், அப்சலின் உடலை கேட்டு, அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்சலின் குடும்பத்தினர் விரும்பினால், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள மத்திய அரசு வசதிகளை செய்து தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.