அப்சல் குரு விஷயத்தில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்: குடும்பத்தினர்

Updated : பிப் 12, 2013 | Added : பிப் 12, 2013 | |
Advertisement
ஸ்ரீநகர்: அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விஷயத்தில், அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அப்சல் குரு உறவினர் முகமது யாசின் கூறுகையில், "எங்களது ஒரே வேண்டுகோள் அப்சல் குருவின் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்தவுடன், திகார் சிறை அதிகாரிகளுக்கும், பாரமுல்லா

ஸ்ரீநகர்: அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விஷயத்தில், அரசியல் செய்வதை நிறுத்துங்கள் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அப்சல் குரு உறவினர் முகமது யாசின் கூறுகையில், "எங்களது ஒரே வேண்டுகோள் அப்சல் குருவின் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே. அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்தவுடன், திகார் சிறை அதிகாரிகளுக்கும், பாரமுல்லா துணை கமிஷனருக்கும் அப்சல் குருவின் உடலை கேட்டு கடிதம் எழுதியுள்ளோம்" என்று தெரிவித்தார். அப்சல் குரு உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுகை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அனுமதி கொடுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த அவர், "அதனால் எந்தபயனும் இல்லை. நாங்கள் எங்கு போய் தொழுகை நடத்துவது. அப்சல் குருவின் உடலை சோப்பூரில் அடக்கம் செய்ய விரும்புகிறோம். அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட விவகாரத்திற்குள் போக விரும்பவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் இதை வைத்து அரசியல் செய்து வருகிறார். தயவு செய்து அப்சல் குரு விஷயத்தில் அரசியல் செய்வதை நிறுத்துங்கள்" என அவர் கேட்டுக்கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X