பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீபெரும்புதூர் புறவழி சாலையில் பேருந்து நிழற்குடை தேவை

Added : பிப் 14, 2013
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதூர்:"ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில், பயணிகள் நலன் கருதி, பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்' என, பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே, மாம்பாக்கம், இருங்காட்டுகோட்டை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், ஆகிய இடங்களில்

ஸ்ரீபெரும்புதூர்:"ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையில், பயணிகள் நலன் கருதி, பேருந்து நிழற்குடை அமைக்க வேண்டும்' என, பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ஸ்ரீபெரும்புதூர்

பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே, மாம்பாக்கம், இருங்காட்டுகோட்டை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், ஆகிய இடங்களில் சிப்காட்

வளாகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள தொழிற்சாலைகளில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குடியேறி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து அதிகமாகி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி, மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதனால், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், போளூர், திருவண்ணாமலை

பணிமனைகளில் இயக்கப்படும் பேருந்துகள், ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் வராமல், புறவழிச்சாலை வழியே செல்கின்றன.இதனால், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வெளியூர் செல்வோர், பேருந்துக்காக தேசிய

நெடுஞ்சாலையில் காத்திருக்க வேண்டி உள்ளது.அங்கு நிழற்குடை இல்லாததால், மழை மற்றும் வெயிலில், மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் புறவழிச்சாலையில்

நிழற்குடை அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X