எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'

Added : பிப் 16, 2013 | கருத்துகள் (27)
Share
Advertisement
திருப்புத்தூர் : சிங்கப்பூர் "சாங்கி' பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு பலகைகளில், "தமிழ்' மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும்,
சிங்கப்பூர் விமான நிலையத்தில் மறைந்து விட்ட "தமிழ்மொழி'

திருப்புத்தூர் : சிங்கப்பூர் "சாங்கி' பன்னாட்டு விமான நிலைய அறிவிப்பு பலகைகளில், "தமிழ்' மொழி நீக்கப்பட்டது. இது குறித்து தமிழக பயணிகளை கவலையடையச் செய்துள்ளது. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு தமிழர்களின் பங்கு, இங்கிலாந்து ஆட்சி காலத்திலும், தற்போதும் அளவில்லாதது. அந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில், நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும், தமிழர்கள் அதிகம் உள்ளனர். அங்கு சுற்றுலா செல்பவர்களிலும் தமிழர்களே அதிகம்.

வேலைக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படும் "தற்காலிக அனுமதி கடிதம்' கூட தமிழில் இருக்கும். அரசின் அலுவலக மொழிகளாக தமிழ், ஆங்கிலம், சீனா, மலாய் உள்ளதால், நகரின் பெரும்பாலான அறிவிப்பு பலகைகளில் நான்கு மொழிகளுமே காணப்படும்.

மேலும், சேமநலநதி,பொது பயன்பாட்டு பில்கள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு பரிமாற்ற அச்சிதழ்களும் 4 மொழிகளில் இருக்கும். சிங்கப்பூருக்கு சென்னையிலிருந்து தினமும் 25 விமானங்களும், திருச்சியிலிருந்து 4 விமானங்களும் இயக்கப்படுகின்றன.

அங்குள்ள "சாங்கி' பன்னாட்டு விமான நிலையத்தில், இந்த 4 மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகள் காணப்பட்டன. ஆனால், அண்மை காலமாக, அந்த விமான நிலைய புதிய அறிவிப்பு பலகைகளில், தமிழ் தவிர மற்ற 3 மொழிகளும் இடம்பெறுகின்றன. இதனால் தொடர்ந்து சிங்கப்பூர் சென்று, வரும் தமிழர்கள் விமான நிலையத்தில் "தமிழ்' மறைக்கப்பட்டதைப் பார்த்து, கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duvaraga - mangaf,குவைத்
08-மார்-201303:42:06 IST Report Abuse
duvaraga இலக்கண தமிழை கொஞ்சமாவது pesuvathu இந்தியாவில் கன்னியாகுமரியை charrnthavargalஇதை என் அனுபவத்தில் nan தினமும் பார்கிறேன் அனல் அவர்களை என்னோடு வேலைபார்க்கும் தமிழர்கள் தமிழன் எண்டே கூறுவது இல்லை ஆஹாயால் தமிழன் எனது கூறுவதை விட்டுட்டு தேவர் தெலுங்கர் அருந்ததியர் பிரமினர் எண்டு கூறினால்தான் உலஹின் அதிநவீன ஜகி வெறி பிடித்த முட்டாள் தமிழர்களுக்கு தகும்
Rate this:
Cancel
sakthivel - singapore,சிங்கப்பூர்
21-பிப்-201308:37:32 IST Report Abuse
sakthivel சிங்கபூர் தமிழனுக்கு சொந்தம் அல்ல, அப்படி இருந்தும் பிற நாட்டு மொழியான தமிழ் மொழிக்கு அதாவது நம் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களது கலாச்சாரம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் இணைத்து நம் மொழிக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் விமான நிலையத்தில் நம் மொழி இணைக்க படாமல் இருக்கலாம், அதற்காக நம் மொழி மறைக்க முயற்சிப்பதாகவோ அல்லது அளிக்க முற்படுவதாவதோ வாசகர்கள் எண்ணம் கொள்ளவேண்டாம். ஆகையால் தொன்று தொட்டு விளங்கும் நம் மொழியை எவராலும் எந்த சூழ்நிலையிலும் மறைக்கவோ அல்லது அழிக்கவோ இயலாத காரியம். அதனால் நம் மொழி பற்றிய வீண் பயமோ அல்லது கவலையோ வேண்டாம்.
Rate this:
Cancel
Sureshwar Soundararajan - Chennai,இந்தியா
19-பிப்-201307:25:10 IST Report Abuse
Sureshwar Soundararajan என்னை பொறுத்த வரை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் TANDAS என்பது மலாய் பாஷை எனவே சிங்கபூர் தமிழை மறந்து விட்டதாக குறிப்பிடுவதை முழுமையாக ஏற்கமுடியவில்லை.....என் கருத்து முரணாக இருப்பின் மன்னிக்கவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X