இந்தியாவில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை : கால்நடை பராமரிப்புத்துறை அறிவிப்பு

Added : பிப் 16, 2013 | |
Advertisement
நாமக்கல்:இந்தியாவில், பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இல்லையென, கடந்த, 13ம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை செயலருக்கு, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.கர்நாடக மாநிலம்,

நாமக்கல்:இந்தியாவில், பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இல்லையென, கடந்த, 13ம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில கால்நடை பராமரிப்புத்துறை செயலருக்கு, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே ஹெசர்பெட்டாவில், மத்திய அரசுக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. அந்த பண்ணையில், கினி கோழி, வான் கோழி, ஈமு கோழி மற்றும் பண்ணைக் கோழிகள் உள்ளன. அந்த பண்ணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், திடீரென, 3,400 வான்கோழிகள் இறந்தன.அதை, மத்திய சுகாதாரத் துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, வான்கோழிகளை, பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி இறந்தது கண்டறியப்பட்டது. அதன் எதிரொலியாக, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முட்டை மற்றும் கோழிகளுக்கு, கேரள மாநில அரசு, தடை விதித்து உத்தரவிட்டது.

அதுபோல், இந்திய முட்டை இறக்குமதிக்கு, ஓமன் நாட்டிலும் தடை விதிக்கப்பட்டது. தற்போது, கேரள மாநிலத்திற்கு, தமிழக, கர்நாடக முட்டை, கோழி இறைச்சி விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. எனினும், ஓமன் நாட்டில், இந்திய முட்டைக்கு விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து நீடித்து வருகிறது.அத்தடையை நீக்க, மத்திய அரசு, பல்வேறு கட்ட நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய கால்நடை பராமரிப்புதுறையினர், நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டதில், இந்தியாவில், பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் இல்லையென தெரியவந்துள்ளது.

அதுகுறித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கால்நடை பராமரிப்புத் துறை செயலருக்கும், கடந்த, 13ம் தேதி, மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் மூலம், "இந்தியாவில் பறவை காய்சல் இல்லை' என, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக, ஓமன் நாட்டில், இந்திய முட்டை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை, நீக்கம் செய்யப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இது, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X